"நக்கீரன்' வாரம் இருமுறை இதழ் அலுவலகம் மீது, அ.தி.மு.க.,வினர் நேற்று, இரண்டாa வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று முன்தினம், அ.தி.மு.க.,வினர், தமிழகம் முமுவதும், நக்கீரன் இதழை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.சென்னை, ராயப்பேட்டையில் உள்ள நக்கீரன் அலுவலகம் முன், வேளச்சேரி எம்.எல்.ஏ., அசோக் தலைமையில், அ.தி.மு.க.,வினர், ராயப்பேட்டையில் உள்ள, நக்கீரன் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திடீரென, அலுவலகத்திற்குள் புகுந்து, ஊழியர்களை விரட்டியடித்து கல்வீசித் தாக்கினர். இதைத்தொடர்ந்து, அசோக் எம்.எல்.ஏ., உள்ளிட்டோரைக் கைது செய்து, கல்யாண மண்டபத்தில் தங்க வைத்து, மாலையில் போலீசார் விடுவித்தனர். இரண்டாவது நாளாக தாக்குதல்: நேற்று பகல், 12 மணியளவில், அ.தி.மு.க.,வினர், 50 பேர் கும்பலாக, நக்கீரன் அலுவலக வாயிலுக்கு வந்தனர். திடீரென செங்கல், கருங்கற்களை அலுவலகம் மீது வீசி தாக்குதல் நடத்தினர். இதில், கார் கண்ணாடி, கட்டட கண்ணாடிகள் நொறுங்கின. பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசாரால் கட்டுப்படுத்த முடியவில்லை. நக்கீரன் கோபால் மீது வழக்கு: புதுப்பேட்டையைச் சேர்ந்த அ.தி...