ஹீரோவாகும் சந்தானம்!


2011 இல் அதிக படங்களில் நடித்த டாலிவூட் நடிகர்கள் பட்டியலில், சந்தானம் நம்பர்.1 இடத்தை
பிடித்துள்ளார். 2012 இலும் அந்த நம்பவர்.1 இடத்தை தக்க வைப்பார் போல.. அவ்வளவு படங்கள் கைவசம் வைத்திருக்கிறார்.

ரவிக்குமார் மற்றும் ஏ.வெங்கடேஷ் ஆகியோருக்கு துணை இயக்குனராக நூற்றுக்கு மேற்பட்ட படங்களில் பணிபுரிந்துள்ள செல்வகுமார் முதன்முறையாக் திரைப்படமொன்றை இயக்கவிருக்கிறார். அதற்கு மிர்ஷி சிவா, சந்தானம், நகுல், பிரேம்ஜி அமரன் என ஒரு நகைச்சுவை பட்டாளம் ஒன்று சேரவிருக்கிறதாம்.

சமீபத்தில் கடந்த வருடத்தின் சிறந்த நகைச்சுவை நடிகர் எனும் விருதை, சிறுத்தை, வேலாயுதம்
திரைப்படங்களுக்காக பெற்றிருந்தார் சந்தானம். ஸ்பெஷலாக சிறுத்தை படத்துக்காக திருடன் கெட்டப்பில் எப்படி நடிப்பது என உண்மையான திருடனான 'காட்டுப்பூச்சி'யுடன் கொஞ்சநாள் ஃபலோ பண்ணினேன்.. அவன் பிடிபட்ட போது எனது நண்பர் தான் சந்தானம் என என்னையும் வம்புக்கு இழுத்துவிட்டு, பொலிஸ்  வந்து என்னிடம் ஒரே ரகளை என காமடி பண்ணினார் சந்தானம்.
சந்தானம், கிருஷ்ணடு, சோனியா தீப்தி நடிப்பில் அண்மையில் வெளிவந்த விநாயகா படமும் திரையில் காமடியில் பிண்ணி எடுக்கிறதாம்.   கௌதம் மேனன் இயக்கத்தில் ஒரு படம், ராஜேஷ் இயக்கத்தில் ஜீவா - ஆர்யா சேரும் ஒரு படம், இப்போது வெளிவரவிருக்கும் ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படம் என ஏகப்பட்ட படங்களில் சந்தானம் முகம் தான் அதிகமாக தெரிய போகிறது.

இதைவிட வேற்றுமொழியிலிருந்து தமிழுக்கு வரும் ரீமேக் படமொன்றிலும் சந்தானம் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம். அந்த படத்துக்கு பெயர் 'மக்கள் ராமன்'

Comments

Popular posts from this blog

பிளாக்கரில் திருக்குறள் வெட்ஜெட் இணைக்க

பிளாக்கரில் youtube வெட்ஜெட் இணைக்க