கொலவெறி தனுஷுக்கு எதிராக புகார்!
கொலவெறி பாடல் எழுதி பாடிய ரஜினிகாந்த் மருமகன் தனுஷுக்கு எதிராக பெண்களை இழிவுபடுத்துவதாக காவல்துறையில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் வெளிவந்த ”மயக்கம் என்ன” என்ற ஒரு படத்தில் நடிகர் தனுஷும் அந்தப்படத்தின் இயக்குனர் செல்வராகவனும் ஒரு பாடலை எழுதியிருந்தனர். அந்தப் பாடலில் பெண்களை இழிவுபடுத்தும் பல வார்த்தைகள் இருப்பதாகக் கூறி ராமசுப்ரமணியம்
என்பவர் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார். பெண்களை மதிக்கும் நமது கலாச்சாரத்துக்கு மாற்றாக இந்தப் பாடல் வரிகள் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.இந்தப் படம் வெளிவந்து நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்தப் புகார் கொடுக்கப்பட்டுள்ளது, ஓடாத படத்தை ஓட்டுவதற்காக செய்யப்பட்ட வியாபாரத் தந்திரமாக இருக்கலாம் என்று சிலர் கூறியுள்ளனர்.
Comments
Post a Comment
உங்கள் கருத்துக்கள் எதுவாக இருந்தாலும் இங்கே தெரிவிக்கலாம் ... நன்றி .....