முல்லைப் பெரியாறு விவகாரம் உச்சநீதிமன்ற குழுவிடம் கேரளா இன்று அறிக்கை தாக்கல்

முல்லை பெரியாறில் புதிய அணை கட்டுவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட உயர் அதிகார குழுவிடம் இன்று அறி க்கை தாக்கல் செய்யப்படும் என்று கேரள முதல்வர் உம்மன்சாண்டி கூறினார். கேரள முதல்வர் உம்மன்சாண்டி நேற்று கண்ணூரில் நடந்த பொதுமக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியதாவது:


முல்லைப் பெரியாறில் தற்போதுள்ள அணை பலவீனமாக இருப்பதால் புதிய அணை கட்டவேண்டும் என்று கேரளா பல வருடங்களாக வலியுறுத்தி வருகிறது. ஆனால் அணை உறுதியாக இருப்பதாக தமிழ்நாடு கூறி வந்தது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட உயர் அதிகார குழு கூட்டத்தில் முதன்முதலாக புதிய அணை குறித்து பரிசீலிக்கப்பட்டுள்ளது. இது கேரளா பல ஆண்டுகள் மேற்கொண்ட முயற்சிக்கு கிடைத்த வெற்றி. 

புதிய அணை கட்டும்போது, அணையின் கட்டுப்பாட்டை யாருக்கு அளிப் பது என்பது குறித்து 6ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க உயர் அதிகார குழு கேட்டுக்கொண்டுள்ளது. அதன்படி நாளை உச்சநீதிமன்ற குழுவிடம் கேரளா அரசு அறிக்கை தாக்கல் செய்யும். அதில் புதிய அணை கட்டும்போது அணையின் கட்டுப்பாடு தமிழ்நாடு, கேரளா மற்றும் மத்திய அரசு இணைந்து ஏற்கலாம் என்று தெரிவிக்கப்படும். 

ஏற்கனவே பரம்பிக்குளம்&ஆழியாறு, சிறுவாணி ஆகிய அணைகளும் இதேபோல் தான் தமிழ்நாடு, கேரளா கூட்டு கட்டுப்பாட்டில் உள்ளது. அதே போல் புதிய அணைக்கும் கூட்டு கட்டுப்பாட்டு திட்டம் செயல்படுத்தலாம். இவ்வாறு அவர் கூறினார். புதிய அணை கட்டும்போது அணையின் கட்டுப்பாடு தமிழ்நாடு, கேரளா மற்றும் மத்திய அரசு இணைந்து ஏற்கலாம் என்று தெரிவிக்கப்படும்.

Comments

Popular posts from this blog

தொழில்முறை வலைப்பதிவு எப்படி

கூகுள் அட்சென்ஸ் கிடைக்கவில்லையா

இணையத்தில் பணம் சம்பாதிக்க - 1