Posts

Showing posts with the label சினிமா

ரஜினியின் புகழ்பெற்ற கேரக்டர் பெயரை தலைப்பாக்கிய கார்த்தி

Image
சகுனிக்குப் பிறகு தான் நடிக்கும் அடுத்த படத்துக்கு ரஜினியின் புகழ்பெற்ற ஒரு கேரக்டர் பெயரையே தலைப்பாக்கியுள்ளார் கார்த்தி. ‘என் பேர கேட்டா அழுவுற குழந்தை கூட வாயை மூடும்’ என்பார் வில்லன். அதற்கு ரஜினி, ‘கண்ணா.. அதே குழந்தை கிட்ட என் பேரை சொல்லிப்பாரு… அவங்கம்மா வாயையும் சேர்த்து மூடும்,’ என்பார் ஹீரோ…

அரசியலுக்கு வர எனக்கு எந்த தகுதியும் கிடையாது : அஜித் அதிரடி பேட்டி!

Image
எனக்கு சினிமா மட்டும் தான் தெரியும், அரசியல் தெரியாது. அரசியலுக்கு வர எனக்கு எந்த தகுதியும் கிடையாது நடிகர் அஜித் அதிரடியாக கூறியிருக்கிறார். தற்போது பில்லா-2 படத்தில் பிஸியாக இருக்கும் அஜித், எதிர்காலத்தில் அரசியலுக்கு வரும் எண்ணம் இருக்கிறதா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

பில்லா இரண்டில் படத்தில் காஸ்ட்லி ஹெலிகாப்டர் ஃபைட்!

Image
பில்லா இரண்டாம் பாகம் படத்தில் நடித்து முடித்துவிட்ட அஜித்தை அடுத்து இயக்கப் போகிறார் `சிறுத்தை'  பட இயக்குனர் சிவா.  அஜித்துக்கு இவர் சொன்ன முதல் கதையே பிடித்துப்போனதால் செம குஷியாக அந்தப் படத்துக்கான திரைக்கதையை உருவாக்கத் தொடங்கி விட்டார். "எந்த மாதிரியான அஜித்தை திரைக்குத் தரப்போகிறீர்கள்?'' என்று சிவாவிடம் கேட்டால் தொழில் நேர்த்தியான பதில் வருகிறது இயக்குனரிடமிருந்து…“ உலக அளவில் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர்கள் சிலரின் ஸ்டைல் ஆக்டிங்கை நான் அஜித்திடம் பார்க்கிறேன். அஜித்தின் இந்த தனித்துவமான திறமையை வெளிகொண்டும் வகையில்  என் இயக்கத்தில் அவரைப் பார்க்கலாம். அதற்கான திரைக்கதையை உருவாக்கத் தொடங்கும்போதே ஸ்டைலான அஜித் என் மனத்திரைக்குள் வந்து விட்டார்...'' என்கிறார். சிவா ஒருபக்கம் இப்படி மிரட்டிக்கொண்டிருக்க இன்னோரு பக்கம் பில்லா இரண்டிற்காக எடுக்கப்பட்டிருக்கும் ஒரு ஹெலிகாப்டர் பைட் பற்றி இப்போதே அணல் பறக்கிறது கோடம்பாக்கதில்! படத்தின் திரைக்கதைப்படி முதலில் ஹெலிகாப்டர் சேஸிங் மட்டுமே இருந்திருகிறது. பிரேஸில் நாட்டில் ஹாலிவுட் ஆக்‌ஷன் கலைஞர்களைக...

கமலின் தலைவன் இருக்கின்றானில் ஜாக்கி சான்

Image
ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சான் பெயரைச் சொன்னாலே குட்டீஸ் எல்லாம் ஆ, ஊ என்று ஆரம்பித்துவிடுவார்கள். அவர் தனது நடிப்பால் குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார். இந்நிலையில் இதுவரை ஹாலிவுட் மற்றும் சீன படங்களில் நடித்த ஜாக்கி சான் முதன்முறையாக கோலிவுட்டில் நடிக்கிறார். கமல் தலைவன் இருக்கின்றான் என்ற படத்தை இயக்குகிறார்

அஜித்-ஆர்யா-நயன்தாரா கூட்டணியில் விஷ்ணுவர்தன் இயக்கும் புதிய படம்!

அஜித்தை வைத்து விஷ்ணுவர்தன் இயக்க இருக்கும் புதிய படத்தில், அஜித்துக்கு ஜோடியாக நயன்தாராவும், கூடவே இன்னொரு முக்கிய ரோலில் ஆர்யா நடிக்க போவதாகவும் தகவல்‌கள் வெளியாகியுள்ளது. கடந்த 2007ம் ஆண்டு விஷ்ணுவர்தன் இயக்கத்தில், அஜித் நடித்த பில்லா படம் மாபெரும் ஹிட்டானது. தொடர்ந்து அஜித்தை வைத்து பில்லா-2 படத்தையும் விஷ்ணுவர்தன் தான் இயக்குவதாக இருந்தது. ஆனால் இடையில் தெலுங்கு பட பிஸியால், விஷ்ணுவர்தன் அந்த படத்தை இயக்க முடியாமல் போனது. இதனையடுத்து அந்த பொறுப்பை உன்னைப்போல் ஒருவன் சக்ரி டோல்டி ஏற்றார். தற்போது இப்படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது, கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது.

அஜித்,விஜய் படத்திற்கு இசை அமைக்க முடியுமா ? இளையராஜா!

Image
கோடம்பாக்கத்தின் ஹாட் டாபிக் இசைஞானி இளையராஜா கவுதம் மேனன் படத்திற்கு இசை அமைக்க ஒப்புக் கொண்டது தான். நிலைமை இப்படி இருக்க தற்கால திரைப்படங்கள் மீது இளையராஜாவுக்கு இன்னமும் ஏதோ சின்ன நெருடல் இருக்கத்தான் செய்கிறது என்பது அண்மையில் நடந்த “தோனி” பட ஆடியோ வெளியீட்டு விழாவில் அவர் பேசியதில் இருந்து அப்பட்டமாக தெரிகிறது.

நயன்தாரா ரிட்டன்ஸ்! எடுத்த எடுப்பிலேயே ரூ.1.5 கோடி சம்பளம்!

Image
காதல் கசந்துவிட்டதால் மீண்டும் நடிக்க ஆரம்பத்திருக்கும் நயன்தாராவுக்கு எடுத்த எடுப்பிலேயே ரூ1.5 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். தமிழ், தெலுங்கில் டாப் நடிகையாக வலம் வந்தவர் நயன்தாரா. பிரபுதேவாவை திருமணம் செய்ய இருந்ததால், தெலுங்கில் ஸ்ரீராம்ராஜ்யம் படத்தோடு நடிப்பிற்கு முழுக்கு போட்டார். சினிமாவை விட்டு விலகுவதற்கு முன்பு வரை அவருடைய மார்க்கெட் ரேட்டிற்கு எந்த சரிவும் இல்லை. நல்ல நிலையிலேயே அவர் சினிமாவை விட்டு நீங்கினார்.

நிர்வாணமாக நடிக்கிறாரா காதல் சரண்யா?

Image
கோலிவுட்டின் சமீபத்திய ஹாட் டாக் காதல் சரண்யாவைப் பற்றியது தான். அம்மணி காதல், பேராண்மை என சொற்ப படங்களில் தான் நடித்திருக்கிறார். இந்நிலையில் மழைக்காலம் என்ற படத்தில் முக்கிய ரோலில் நடிக்கும் சரண்யாவுக்கு இதுவரை அவர் வாங்கிராத சம்பளம் அளிக்கப்பட்டுள்ளதாம்.

பில்லா -2 வெளிநாட்டு உரிமை: 1 மில்லியன் டாலர்

Image
அஜீத் நடிக்கும் பில்லா 2 படத்தின் வெளிநாட்டு உரிமை, இதுவரை அவரது படங்கள் விற்காத அளவு 1 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டுள்ளது. அஜீத்தின் பில்லா 2 படப்பிடிப்பு நிறைவுக் கட்டத்தை அடைந்துள்ளது. இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு உள்ளதால், படத்தை வாங்க உள்ளூரில் பெரும் போட்டி ஏற்பட்டுள்ளது.

கொலவெறி தனுஷுக்கு எதிராக புகார்!

Image
கொலவெறி பாடல் எழுதி பாடிய ரஜினிகாந்த் மருமகன் தனுஷுக்கு எதிராக பெண்களை இழிவுபடுத்துவதாக காவல்துறையில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் வெளிவந்த ”மயக்கம் என்ன” என்ற ஒரு படத்தில் நடிகர் தனுஷும் அந்தப்படத்தின் இயக்குனர் செல்வராகவனும் ஒரு பாடலை எழுதியிருந்தனர். அந்தப் பாடலில் பெண்களை இழிவுபடுத்தும் பல வார்த்தைகள் இருப்பதாகக் கூறி ராமசுப்ரமணியம்

அஜீத் மகள் மனதைக் கவரும் அழகி: ராதிகா சரத்குமார்

Image
அஜீத், ஷாலினியின் மகள் அனோஷ்கா ஒரு அழகி என்று நடிகை ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார். தல அஜீத், அவரது மனைவி ஷாலினி, மகள் அனோஷ்கா மற்றும் சரத்குமார், அவரது மனைவி ராதிகா, மகன் ராகுல் ஆகியோர் அண்மையில் சந்தித்தனர். அப்போது அஜீத்தின் செல்ல மகள் தனது மனதைக் கொள்ளை கொண்டதாக ராதிகா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது,

மணிரத்னம் கடைசியாகப் பிடித்த கதாநாயகி!

Image
மணிரத்னம் இயக்கத்தில் கார்த்திக்கின் மகன் கவுதம் ஹீரோவாக அறிமுகமாகும் படம் பூக்கடை! கார்த்திக்கிற்கு அறிமுகப்படமான அலைகள் ஓய்வதில்லை எப்படியோரு மெகா வெற்றிப் படமாக அமைந்ததோ அதேபோல, தனது மகனுக்கும் கடற்கரையை ஒட்டிய கதைக்களத்துடன் கூடிய கதை அமைந்ததும், செண்டிமெண்டலாக ஒப்புகொண்டாராம் கார்த்திக்! மணிக்கு நச்சென்று இளம் ஹிரோ கிடைத்து விட்டாலும், அவருக்கான ஜோடியைப்

நான் தனுஷை நம்புகிறேன்! – ஐஸ்வர்யா

Image
சமீபத்தில் கோடம்பாக்கத்தையே கலக்கிய செய்தி என்றால் அது தனுஷ் – ஸ்ருதி ஹாஸன் விவகாரம்தான். செய்தி வெளியான அன்றே அதை மறுத்திருந்தார் ஸ்ருதி. ஆனால் தனுஷ் ஒன்றும் பேசவில்லை. மாறாக அன்று மாலை நடந்த 3 படப்பிடிப்பில் மனைவி ஐஸ்வர்யாவுடன் ஜாலியாக போஸ் கொடுத்திருந்தார் அவர்.

ஹீரோவாகும் சந்தானம்!

Image
2011 இல் அதிக படங்களில் நடித்த டாலிவூட் நடிகர்கள் பட்டியலில், சந்தானம் நம்பர்.1 இடத்தை பிடித்துள்ளார். 2012 இலும் அந்த நம்பவர்.1 இடத்தை தக்க வைப்பார் போல.. அவ்வளவு படங்கள் கைவசம் வைத்திருக்கிறார். ரவிக்குமார் மற்றும் ஏ.வெங்கடேஷ் ஆகியோருக்கு துணை இயக்குனராக நூற்றுக்கு மேற்பட்ட படங்களில் பணிபுரிந்துள்ள செல்வகுமார் முதன்முறையாக் திரைப்படமொன்றை இயக்கவிருக்கிறார். அதற்கு மிர்ஷி சிவா, சந்தானம், நகுல், பிரேம்ஜி அமரன் என ஒரு நகைச்சுவை பட்டாளம் ஒன்று சேரவிருக்கிறதாம். சமீபத்தில் கடந்த வருடத்தின் சிறந்த நகைச்சுவை நடிகர் எனும் விருதை, சிறுத்தை, வேலாயுதம்

விஜயுடன் போட்டி போடும் மைனா ஹீரோ!

Image
ரஜினி, விஜய் ஆகிய இரண்டு பேரின் படங்கள் வெளியாகிற நாளில், மற்ற பெரிய ஹீரோக்களின் படங்களை வெளியிட, சம்பந்தப் பட்ட படங்களின் தயாரிப்பாளர்கள் நிறையவே யோசிப்பார்கள். இதைவிட புதுமுகங்கள் அறிமுகமாகும் படங்களை சுத்தமாக வெளியிட மாட்டார்கள். மீறி வெளியிட்டால் கழுத்தில்  கல்லைக் கட்டிக்கொண்டி கிணற்றில் குதிக்கிற கதைதான். முக்கியாக விஜய் படம் வெளியாகிற நாளில் அவரது படத்துடன் மோதி ஜெயிக்க வேண்டும் என்று துணிந்து சாதிக்துக்காட்டியிருக்கும் பெரிய நாயகன் சூர்யா மட்டும்தான்.

ஜாக்கெட் அணியாமல் நடிக்கும் மிதுனா!

சின்னத்திரை தொடரில் நடிகை மிதுனா ஜாக்கெட் அணியாமல் நடிக்கிறார். மாமதுரை படத்தின் மூலம் நாயகியாக ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை மிதுனா. இவர் கருத்தம்மா ராஜஸ்ரீயின் தங்கை. சினிமா வாய்ப்பு இல்லாததால் திரையுலகில் இருந்து விலகியிருந்த மிதுனா சின்னத்திரை தொடர் ஒன்றில் நடிக்கவுள்ளார்.

‘ராணாவுடன் காதலில்லை; ஆனால் அதிகாலை 3 மணிவரை..!!’ – த்ரிஷா

Image
தெலுங்கு நடிகர் ராணாவுடன் எனக்கு காதல் என்று வந்த செய்திகளில் உண்மையில்லை. அவரும் நானும் நல்ல நண்பர்கள். தினமும் அதிகாலை மூன்று மணிக்கு நாங்கள் பேசிக் கொள்வோம், என்று கூறியுள்ளார் நடிகை த்ரிஷா. தெலுங்கில் லீடர் படம் மூலமாக நாயகனாக அறிமுகமானவர் டக்குபதி ராணா. இந்திப் படங்களிலும் நடிக்கிறார். தமிழில் ‘வடசென்னை’ என்ற பெயரில் தயாராகும் படத்தில் நடிக்கிறார். இவர் பிரபல தயாரிப்பாளர் டி.ராமாநாயுடுவின் பேரன். நடிகர் நாகார்ஜுனாவின் மருமகன். பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் நிறைய நடிகைகள் இவருக்கு காதல் வலை வீசினர். இப்போதும் யாராவது ஒருவருடன் இவரை

மீண்டும் ஒரு சந்திரமுகி! மீண்டும் ஒரு சந்திரமுகி!

Image
ரஜினிகாந்த் நடித்துக் கொண்டிருக்கும் அனிமேஷன் படம் “கோச்சடையான்”. ரஜினியின் மகள் சௌந்தர்யா  அஸ்வின் இந்த படத்தை இயக்குகிறார். கோச்சடையான் முடிந்ததும் நிறுத்தப்பட்ட ராணா படப்பிடிப்பு துவங்குமா? என்ற கேள்விக்கு இல்லை என்று பதில் சொல்வது போல, ரஜினி அடுத்ததாக பி.வாசு இயக்கும் படத்தில் நடிப்பதாக தெரிகிறது.  ரஜினியின் மன்னன், சந்திரமுகி ஆகிய படங்களை இயக்கியவர் பி.வாசு. இந்த படத்தை தயாரிக்கும் பொறுப்பை சிவாஜி பிலிம்ஸ் நிறுவனம் ஏற்றுள்ளது. இந்த கூட்டணி மெகா ஹிட்டான “சந்திரமுகி” படத்தின் கூட்டணி என்பதால், இந்த படம் அடுத்த சந்திரமுகியாக இருக்குமோ! என்ற ஆவல் ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.

காதலில் விழுந்தார் நமீதா

Image
நடிகை நமீதா தற்போது மும்பையைச் சேர்ந்த வக்கீல் ஒருவரை தீவிரமாக காதலித்து வருகிறாராம். நமீதா,அவரது முன்னாள் பாய் பிரெண்ட் பரத் கபூருடன் ஏற்பட்ட மனக்கசப்புக்குப் பின்னர் எந்த கிசுகிசுவிலும் சிக்காமல் இருந்து வந்தார். இந்நிலையில் தற்போது அவர் வக்கீல் ஒருவரின் காதல் வலையில் விழுந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றனர்.

நண்பன், வேட்டை படங்களுக்கு தியேட்டர்கள் அறிவிப்பு

Image
பொங்கலுக்கு வரும் படங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகிவிட்டன. இரண்டு படங்கள் மட்டுமே வெளியாகும் என்று தெரிகிறது. விஜய் – ஜீவா – ஸ்ரீகாந்த் நடித்துள்ள ஷங்கரின் நண்பன், ஆர்யா, மாதவன் நடித்துள்ள வேட்டை ஆகியவைதான் அந்த இரு படங்களும். வரும் 12-ம் தேதி சென்னையில் 20-க்கும் மேற்பட்ட அரங்குகளில் வெளியாகிறது நண்பன். இதற்கான அறிவிப்பினை நேற்றுமுதல் வெளியிட ஆரம்பித்துள்ளனர்.