மீண்டும் ஒரு சந்திரமுகி! மீண்டும் ஒரு சந்திரமுகி!

கோச்சடையான் முடிந்ததும் நிறுத்தப்பட்ட ராணா படப்பிடிப்பு துவங்குமா? என்ற கேள்விக்கு இல்லை என்று பதில் சொல்வது போல, ரஜினி அடுத்ததாக பி.வாசு இயக்கும் படத்தில் நடிப்பதாக தெரிகிறது.
ரஜினியின் மன்னன், சந்திரமுகி ஆகிய படங்களை இயக்கியவர் பி.வாசு. இந்த படத்தை தயாரிக்கும் பொறுப்பை சிவாஜி பிலிம்ஸ் நிறுவனம் ஏற்றுள்ளது. இந்த கூட்டணி மெகா ஹிட்டான “சந்திரமுகி” படத்தின் கூட்டணி என்பதால், இந்த படம் அடுத்த சந்திரமுகியாக இருக்குமோ! என்ற ஆவல் ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.
இயக்குனர் கதையை எழுதி முடிக்கும் நிலையில் உள்ளார். ரஜினியும் கோச்சடையான் படத்திற்கு குறைந்த நாட்களே கால்ஷீட் கொடுத்திருப்பதால், பி.வாசு வின் படம் விரைவில் ஆரம்பிக்கப்படும் என்று தெரிகிறது.
Comments
Post a Comment
உங்கள் கருத்துக்கள் எதுவாக இருந்தாலும் இங்கே தெரிவிக்கலாம் ... நன்றி .....