நண்பன், வேட்டை படங்களுக்கு தியேட்டர்கள் அறிவிப்பு
பொங்கலுக்கு வரும் படங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகிவிட்டன. இரண்டு படங்கள் மட்டுமே வெளியாகும் என்று தெரிகிறது. விஜய் – ஜீவா – ஸ்ரீகாந்த் நடித்துள்ள ஷங்கரின் நண்பன், ஆர்யா, மாதவன் நடித்துள்ள வேட்டை ஆகியவைதான் அந்த இரு படங்களும்.
வரும் 12-ம் தேதி சென்னையில் 20-க்கும் மேற்பட்ட அரங்குகளில் வெளியாகிறது நண்பன். இதற்கான அறிவிப்பினை நேற்றுமுதல் வெளியிட ஆரம்பித்துள்ளனர்.
இந்தியில் வெளியான 3 இடியட்ஸ் படத்தின் ரீமேக் இது. ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்தக் கதை எந்த அளவு தமிழில் எடுபடும் என்பது ரிலீசான பிறகுதான் தெரியும்.
இதற்கிடையே இந்தப் படம் நேற்று முன்தினம் தணிக்கை செய்யப்பட்டது. படத்துக்கு அனைவரும் பார்க்கக்கூடிய படம் என யு சான்றிதழ் அளித்துள்ளனர் சென்னை தணிக்கைப் பிரிவினர்.
பொங்கலுக்கு வெளியாகும் இன்னொரு படம் வேட்டை. லிங்குசாமி இயக்கியுள்ள இந்தப் படமும் ஜனவரி 12-ம் தேதிதான் வெளியாகிறது. இந்தப் படமும் 20 அரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த முறை பொங்கல் சீஸன் ஜனவரி 12லேயே தொடங்கிவிடுவதால், கிட்டத்தட்ட ஒருவாரம் வரை புதிய படங்களுக்கு ஓபனிங் இருக்கும் என நம்புகிறார்கள் தயாரிப்பாளர்கள்.
Comments
Post a Comment
உங்கள் கருத்துக்கள் எதுவாக இருந்தாலும் இங்கே தெரிவிக்கலாம் ... நன்றி .....