Posts

Showing posts with the label செய்திகள்

பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு

குடியிருப்புகளின் அருகில் அதிக மாசுபடுத்தும் (சிகப்பு மற்றும் ஆரஞ்சு வகை) எந்த ஒரு தொழிற்சாலையும் அமைய அனுமதிக்க கூடாது தேசிய பசுமைத் தீர்ப்பாயம் NGT says polluting industries not allowed in residential area, பசும...

மின்வெட்டில் சாதனை - கருணாநிதி, மின்சாரம் வரும் போகும் என்ற நிலை - விஜயகாந்த்

Image
தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது இந்தியாவிலேயே தமிழ்நாட்டை முதலிடத்துக்கு கொண்டு வருவதே எனது லட்சியம் என்றார் முதலவர் ஜெயலலிதா. விவசாயமும், தொழில்களும் வளர்ந்தால்தான் தமிழ்நாட்டில் வளர்ச்சி ஏற்படும். அதற்கு மின்சாரம் இன்றியமையாதது.

திருடர்களுடனும், குண்டர்களுடனும் கூட்டணி இல்லை : ராகுல் காந்தி தாக்கு

உத்தர பிரதேச சட்டமன்ற தேர்தலில் தேர்தலுக்கு பிறகு எந்த கட்சியுடனும் கூட்டணி கிடையாது. குறிப்பாக திருடர்கள் மற்றும் சமூகவிரோதிகளுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என காங்கிரஸ் கட்சியின் பொதுசெயலாளர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். உத்தர பிரதேச தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு ஏற்படலாம் எனவும், தொங்கு

வடிவேலு பட பாணியில் போலீஸ் ஏட்டை கடத்திய ஆட்டோ டிரைவர் !

நாகர்கோவிலில் குடிபோதையில் ஏட்டை கடத்திய ஆட்டோ டிரைவரை போலீசார் தர்மஅடி கொடுத்து கவனித்தனர். சினிமா ஒன்றில் மாமூல் கேட்கும் போலீசாக நடித்த வடிவேலுவை கடத்தி சென்று வேறு மாநிலத்தில் இறக்கி விடுவது போன்ற காட்சி வரும். இதனை கண்டு சிரிக்காதவர்கள் இருந்திருக்க முடியாது. இந்த காட்சியை பார்த்தோ என்னவோ நாகர்கோவிலில் குடிபோதையில் வந்த ஆட்டோ டிரைவர் ஏட்டை கடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2012 இன் ஆஸ்கார் பரிந்துரைகள்

84 வது அகடமி விருதுகளுக்கான ஆஸ்கார் பரிந்துரைகள் நேற்று கலிபோர்னியாவில் (ஜனவரி 24) அறிவிக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் பெப்ரவரி 26ம் திகதி, லாஸ் ஏஞ்ஸல்ஸின் கோடாக் தியேட்டரில் பிரமாண்டமாக நடைபெறும் அகடமி விருதுகள் வழங்கும்  விழாவில் ஆஸ்கார் விருதுகளை குவிக்க போகும் திரைப்படங்கள் இந்த பரிந்துரைகளில் (Nominations) இருந்தே தெரிவு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2011-12 ம் ஆண்டு வெளிவந்த ஹாலிவூட் மற்றும் சர்வதேச திரைப்படங்களின் தரத்தின் அடிப்படையில் இப்பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளன.

சுரேஷ் கோபியின் முல்லை பெரியாறு முடிவு

Image
முல்லைப் பெரியாறு பிரச்னையில் கேரள நட்சத்திரங்கள் பலர் தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்கும் பாதகமில்லாத நடுநிலையான நிலைபாட்டில் இருந்துகொண்டு மீடியாவைக் கவர்ந்து வருகிறார்கள். மம்முட்டி சத்தமில்லாமல் முதல்வர் ஜெயலலிதாவை வந்து சந்தித்து விட்டு சென்றிருகிறார். தற்போது நிபுணர் குழு அறிக்கை  தமிழகத்துக்கு  சாதகமாக வந்திருக்கும் நேரத்த்தில்  தமிழகம், கேரளா என இரண்டு மாநிலங்களிலும் பிரச்ச்னை மேலும் கொளுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கிறது. இந்த சிக்கலான நேரத்தில், பிரச்னையை சுமூகமாகத் தீர்க்க வேண்டும் என்று  நினைக்கும்  முன்னனி மலையாள  நட்சத்திரங்களான, சுரேஷ் கோபி, திலீப், முகேஷ், இயக்குநர்கள் சித்திக், கமல் உள்ளிட்ட சில

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை: விஜயகாந்த்

ஆட்சி மாறியதே தவிர போலீஸ் துறையில் காட்சி மாறவில்லை. நாள்தோறும், கொலை, கொள்ளை, நகை பறிப்பு, வழிப்பறி என, குற்றச்செயல்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன'' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை : கொலை, கொள்ளை, கற்பழிப்பு, நகை பறிப்பு, வழிப்பறி சம்பவங்களை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், கடந்த ஆட்சியை மக்கள் அகற்றினர். ஆனால், போலீஸ் உயர் அதிகாரிகள் முதல் காவலர் வரை, கடந்த ஆட்சியாளர்களிடம் வைத்திருந்த தொடர்பும், பழக்க

வங்கிக் கணக்கில் 49 ஆயிரம் கோடி ஆசிரியர் அதிர்ச்சி

தனது வங்கிக் கணக்கில் திடீரென 49 ஆயிரம் கோடி இருப்பு இருந்ததைக் கண்டு மேற்கு வங்க ஆசிரியர் ஒருவர் அதிர்ச்சி அடைந்தார். பலூர்கட்டில் உள்ள சக்ரம் பிரஜாலல் உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றும் பரிஜத் சஹா என்பவர் தனது வங்கிக் கணக்கில் இருந்து ரூ 10 ஆயிரம் எடுத்துவிட்டு நிலுவைத் தொகை எவ்வளவு உள்ளது என்று பார்த்துள்ளார். நிலுவைத் தொகை 49,570,08,17,538 என்று காட்டியுள்ளது. இதில் அதிர்ச்சி அடைந்த அவர் ஒருவாரம் யாரிடமும் தெரிவிக்கவில்லை. பின்னர் கமாரபரா எஸ்பிஐ

சட்டரீதியான நடவடிக்கையை சந்திக்க தயாராகுங்கள் : கூகுள் பேஸ்புக்கிற்கு PCI எச்சரிக்கை

Image
இந்தியாவை பற்றி வெளியிட்டு வரும் ஆட்சேபணைக்குரிய கருத்துக்களை நீக்காவிடின் சட்டரீதியான நடவடிக்கையை சந்திக்க தயாராக இருக்கும் படி கூகுள் இந்தியா, பேஸ்புக் நிறுவனங்களுக்கு இந்தியாவின் ஊடக கவுன்சில் (PCI) யின் நிர்வாக இயக்குனரும், நீதியரசருமான மார்கண்டே காத்யூ எச்சரித்துள்ளார்.

முல்லைப் பெரியாறு அணை கட்டிய பென்னிகுயிக்கின் 170வது பிறந்தநாள்: வைகோ மரியாதை

Image
தனது சொத்துக்களை விற்று முல்லைப் பெரியாறு அணை கட்டிய ஆங்கிலேய பொறியாளர் பென்னிகுயிக்கின் 170வது பிறந்த நாளன்று அவரது படத்திற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். ஆங்கிலேயரின் ஆட்சிக்காலமான 19ம் நூற்றாண்டில் தென்தமிழகத்தில் மானவாரி விவசாயம் செய்து வந்தனர். 1806ம் ஆண்டு முதல் 1840ம் ஆண்டு வரை தென் தமிழகத்தி்ல் கடும் பஞ்சம் நிலவியது. இதனை கருத்தில் கொண்டு ஆங்கிலேயர்கள் நீர் ஆதாரங்களை அதிகரிக்க முடிவு செய்தனர். 

அமெரிக்க இராணுவத்தின் மற்றுமொரு (அ)நாகரீக செயல்?!: உலகை உலுக்கியுள்ள புதிய காணொளி

Image
கொல்லப்பட்ட தலிபான்களின் சடலங்கள் மீது, அமெரிக்க இராணுவத்தினர் மலசலம் கழிக்கும் வீடியோ ஒளிப்பதிவு காட்சிகள் ஊடகங்களில் கசிந்துள்ளதுடன் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க இராணுவ கடற்படை பிரிவின் ஸ்னைப்பர் குழுவொன்று ஆப்கானிஸ்தானில் தமது சேவைக்காலத்தின் போது இச்செயலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மரபணு கலப்பில் உருவான உலகின் முதல் குரங்குகள்

Image
ரீஸஸ்  வகைக் குரங்குகள் ஆறின் கருக்களில் இருந்து உயிரணுக்களை ஒன்றாகச் சேர்த்து மரபணு கலப்பு செய்யப்பட்ட மூன்று குரங்குகளை உருவாக்கியுள்ளதாக ஒரெகான் மாகாணத்தைச் செர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த ஆண் குரங்குகள் மூன்றும் அரோக்கியத்துடன் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பசுபதி பாண்டியன் வெட்டிக் கொலை

Image
திண்டுக்கல், ஜன.10: தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்புத் தலைவர் பசுபதி பாண்டியன், திண்டுக்கல் அருகே ஒரு கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல்லில் அவரது வீட்டுக்கு அருகே இந்தக் கொலைச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. பசுபதி பாண்டியனின் மனைவி ஜெஸிந்தா பாண்டியன் சில வருடங்களுக்கு முன்னர் தூத்துக்குடியில் கொலை செய்யப்பட்டார்.

மீண்டும் அணிக்கு திரும்புகிறார் யுவராஜ் சிங்?

Image
ஆஸி.,யில் நடக்கும் டுவென்டி-20 மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் யுவராஜ் சிங்கிற்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி தற்போது டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதன் பின்னர் இரண்டு டுவென்டி-20 கிரிக்கெட் மற்றும் ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது. இதற்கான இந்திய அணி தேர்வு ஜனவரி 15ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. இது தொடர்பாக பி.சி.சி.ஐ., செயலாளர் சஞ்சய் ஜாக்தலே, தேர்வுக்குழு உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட

நக்கீரன் கோபால் மீது ஆறு பிரிவுகளில் வழக்கு:* இரண்டாவது நாளாக தாக்குதல்

 "நக்கீரன்' வாரம் இருமுறை இதழ் அலுவலகம் மீது, அ.தி.மு.க.,வினர் நேற்று, இரண்டாa வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று முன்தினம், அ.தி.மு.க.,வினர், தமிழகம் முமுவதும், நக்கீரன் இதழை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.சென்னை, ராயப்பேட்டையில் உள்ள நக்கீரன் அலுவலகம் முன், வேளச்சேரி எம்.எல்.ஏ., அசோக் தலைமையில், அ.தி.மு.க.,வினர், ராயப்பேட்டையில் உள்ள, நக்கீரன் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திடீரென, அலுவலகத்திற்குள் புகுந்து, ஊழியர்களை விரட்டியடித்து கல்வீசித் தாக்கினர். இதைத்தொடர்ந்து, அசோக் எம்.எல்.ஏ., உள்ளிட்டோரைக் கைது செய்து, கல்யாண மண்டபத்தில் தங்க வைத்து, மாலையில் போலீசார் விடுவித்தனர். இரண்டாவது நாளாக தாக்குதல்: நேற்று பகல், 12 மணியளவில், அ.தி.மு.க.,வினர், 50 பேர் கும்பலாக, நக்கீரன் அலுவலக வாயிலுக்கு வந்தனர். திடீரென செங்கல், கருங்கற்களை அலுவலகம் மீது வீசி தாக்குதல் நடத்தினர். இதில், கார் கண்ணாடி, கட்டட கண்ணாடிகள் நொறுங்கின. பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசாரால் கட்டுப்படுத்த முடியவில்லை. நக்கீரன் கோபால் மீது வழக்கு:  புதுப்பேட்டையைச் சேர்ந்த அ.தி...

கூடங்குளம் போராட்ட காரர்களுக்கு வெளிநாட்டு நிதியுதவி எப்படி கிடைக்கிறது மத்திய அரசு கேள்வி

கூடங்குளம் போராட்ட காரர்களுக்கு வெளிநாட்டு நிதியுதவி எப்படி கிடைக்கிறது என மத்திய அரசு நோட்டிஸ் அனுப்பியுள்ளதாகவும், மத்திய அரசை பின்பற்றி மாநில அரசும் போராட்ட காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞான தேசிகன் தெரிவித்தார்.

குடிகாரர்களின் தேவைகளை நிறைவு செய்ய தமிழக அரசு முன்னேற்பாடு

Image
தமிழக அரசுக்கு கிடைக்கும் வருவாயில் பெருமளவு குடிகாரர்களிடமிருந்து கிடைப்பதால் அவர்கள் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தேவைகளை குறைவின்றி நிறைவேற்றும் விதமாக டாஸ்மாக் கடைகளில் அடுத்த 10 நாட்களுக்குத் தேவையான மதுபானங்களை இருப்பு வைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 2012 ஆம் ஆண்டு தொடங்க உள்ளதையொட்டி புத்தாண்டு கொண்டாட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் ரூ.200 கோடிக்கு விற்பனையை அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.டாஸ்மாக்

முல்லைப் பெரியாறு விவகாரம் உச்சநீதிமன்ற குழுவிடம் கேரளா இன்று அறிக்கை தாக்கல்

Image
முல்லை பெரியாறில் புதிய அணை கட்டுவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட உயர் அதிகார குழுவிடம் இன்று அறி க்கை தாக்கல் செய்யப்படும் என்று கேரள முதல்வர் உம்மன்சாண்டி கூறினார். கேரள முதல்வர் உம்மன்சாண்டி நேற்று கண்ணூரில் நடந்த பொதுமக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியதாவது:

இலங்கையிலிருந்து கனடாவுக்கு கருணா ரகசிய பயணம்: தமிழர்களை பிளவுபடுத்த சதி

Image
விடுதலைப்புலிகள் அமைப்பில் கிழக்கு மாகாண தளபதியாக இருந்தவர் கருணா என்ற விநாயகமூர்த்தி முரளீதரன். சிங்களர்கள் கொடுத்த பணத்துக்கும், பதவிக்கும் ஆசைப்பட்டு இவர் விடுதலைப்புலிகள் அமைப்பை பிளவுபடுத்தி ஈழத்தமிழர்களுக்கு மிகப் பெரிய துரோகத்தை செய்தார். துரோகத்துக்கு பரிசாக இவருக்கு ராஜபக்சே மந்திரி பதவி கொடுத்தார்.

புத்தாண்டு வாழ்த்துக்களால் ஸ்தம்பித்த "ட்விட்டர்'

Image
அதிகளவில் புத்தாண்டு வாழ்த்துக்கள் குவிந்ததால், பிரிட்டனில் "ட்விட்டர்' சமூக வலைதளம், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஸ்தம்பித்து விட்டது. இதனால், பயனாளிகள் கடும் எரிச்சல் கொண்டனர். "ட்விட்டர்' சமூக வலைதளம் மூலம் நேற்று முன்தினம், உலகம் முழுவதிலும் உள்ளோர், பரஸ்பரம் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டனர். இந்நிலையில், பிரிட்டனில் நேற்று முன்தினம், மதிய நேரத்தில், "ட்விட்டர்' ஸ்தம்பித்து விட்டது. அந்த நேரத்தில், ஜப்பானில் புத்தாண்டு துவங்கிவிட்டதால், "ட்விட்டரில்' வாழ்த்துக்கள் குவிய ஆரம்பித்து விட்டன. அதாவது, நிமிடத்துக்கு, 16 ஆயிரத்து 197 வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டன. இதனால், "ட்விட்டர்' ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஸ்தம்பித்து