பில்லா -2 வெளிநாட்டு உரிமை: 1 மில்லியன் டாலர்
அஜீத் நடிக்கும் பில்லா 2 படத்தின் வெளிநாட்டு உரிமை, இதுவரை அவரது படங்கள் விற்காத அளவு 1 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டுள்ளது.
அஜீத்தின் பில்லா 2 படப்பிடிப்பு நிறைவுக் கட்டத்தை அடைந்துள்ளது. இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு உள்ளதால், படத்தை வாங்க உள்ளூரில் பெரும் போட்டி ஏற்பட்டுள்ளது.
பில்லா 2-ன் வெளிநாட்டு உரிமையை ஜிகே மீடியா என்ற நிறுவனம் ஒன்று ரூ.5 கோடியே 30 லட்சத்துக்கு விலைக்கு வாங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. அதாவது 1 மில்லியன் டாலர்.
இதுவரை அஜீத் படம் எதுவும் இவ்வளவு தொகைக்கு வெளிநாட்டில் விற்பனையாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மங்காத்தா படம் ரூ.3 கோடியே 7 லட்சத்துக்குதான் விலை போனது. ரஜினி படம்தான் அதிகபட்சமாக ரூ 15 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது.
அதற்கு அடுத்து கமல், விஜய், சூர்யா படங்கள் ஏற்கனவே ரூ.5 கோடிக்கு விற்கப்பட்டன. இந்த ரூ 5 கோடி லிஸ்டில் இப்போது அஜீத் படமும் சேர்ந்துவிட்டது!
Comments
Post a Comment
உங்கள் கருத்துக்கள் எதுவாக இருந்தாலும் இங்கே தெரிவிக்கலாம் ... நன்றி .....