புத்தாண்டு வாழ்த்துக்களால் ஸ்தம்பித்த "ட்விட்டர்'


அதிகளவில் புத்தாண்டு வாழ்த்துக்கள் குவிந்ததால், பிரிட்டனில் "ட்விட்டர்' சமூக வலைதளம், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஸ்தம்பித்து விட்டது. இதனால், பயனாளிகள் கடும் எரிச்சல் கொண்டனர். "ட்விட்டர்' சமூக வலைதளம் மூலம் நேற்று முன்தினம், உலகம் முழுவதிலும் உள்ளோர், பரஸ்பரம் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டனர். இந்நிலையில், பிரிட்டனில் நேற்று முன்தினம், மதிய நேரத்தில், "ட்விட்டர்' ஸ்தம்பித்து விட்டது.
அந்த நேரத்தில், ஜப்பானில் புத்தாண்டு துவங்கிவிட்டதால், "ட்விட்டரில்' வாழ்த்துக்கள் குவிய ஆரம்பித்து விட்டன. அதாவது, நிமிடத்துக்கு, 16 ஆயிரத்து 197 வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டன. இதனால், "ட்விட்டர்' ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஸ்தம்பித்து
விட்டது. இதனால், ஏற்கனவே வாழ்த்து தெரிவித்தவரும், வாழ்த்து தெரிவிக்கப்பட்டவரும் தங்கள் செய்திகளைக் காண முடியாமல் தவித்தனர். இதன் காரணமாக, பயனாளிகள் கடும் எரிச்சல் அடைந்தனர்.
இதுகுறித்து, அவர்கள் அனுப்பிய செய்திகளில், "ட்விட்டர் ஈஸ் ஓவர் கெபாசிட்டி என்ற, மூன்று வார்த்தைகள் எனது இன்றைய நாளை வீணாக்கிவிட்டன' எனவும், "இந்த புத்தாண்டில் "ட்விட்டர்' எடுக்க வேண்டிய உறுதிமொழி என்னவென்றால், "இனி நான் எப்போதும் ஓவர் கெபாசிட்டி என்ற நிலைக்குப் போக மாட்டேன்' என்பது தான்' எனவும் கிண்டல் செய்துள்ளனர்.
அதேநேரம், "பேஸ்புக்' சமூக வலைதளம், புத்தாண்டு தினத்தன்று, 100 கோடி செய்திகள் மற்றும் புகைப்படங்கள் உலகம் முழுவதிலும் பரிமாறப்படும் என்பதால், அதைச் சமாளிக்கத் தயாராக இருப்பதாக அறிவித்திருந்தது.

Comments

Popular posts from this blog

பிளாக்கரில் திருக்குறள் வெட்ஜெட் இணைக்க

பிளாக்கரில் youtube வெட்ஜெட் இணைக்க