மணிரத்னம் கடைசியாகப் பிடித்த கதாநாயகி!
மணிரத்னம் இயக்கத்தில் கார்த்திக்கின் மகன் கவுதம் ஹீரோவாக அறிமுகமாகும் படம் பூக்கடை! கார்த்திக்கிற்கு
அறிமுகப்படமான அலைகள் ஓய்வதில்லை எப்படியோரு மெகா வெற்றிப் படமாக அமைந்ததோ அதேபோல, தனது மகனுக்கும் கடற்கரையை ஒட்டிய கதைக்களத்துடன் கூடிய கதை அமைந்ததும், செண்டிமெண்டலாக ஒப்புகொண்டாராம் கார்த்திக்!
மணிக்கு நச்சென்று இளம் ஹிரோ கிடைத்து விட்டாலும், அவருக்கான ஜோடியைப்
பிடிப்பததில் மிகவும் மண்டை வலி கண்டுவிட்டது மணிரத்னத்துக்கு. ராதாவின் இளையமகள் துளசிக்கு முதலில் ஸ்கீரின் டெஸ்ட் செய்தார்கள். அதன்பிறகு கமலின் மகள் அக்ஷரா ஹாசனுக்கும் ஸ்கீரீன் டெஸ்ட் எடுத்தார்கள். கடைசியாக பார்த்தீபன் மகள் கீர்த்தனாவையும் டெஸ்ட் எடுத்து பார்த்தாகிவிட்டது.மணிக்கு நச்சென்று இளம் ஹிரோ கிடைத்து விட்டாலும், அவருக்கான ஜோடியைப்
ஆனால் மணிரத்தினத்துக்குப் பிடிக்க வில்லை. இந்தநேரத்தில் மணியின் மனைவி சுஹாசினி “ சமந்தா பொருத்தமாக இருக்கலாம் இல்லையா?” என்று கேட்க, மணி ரத்னம் “ யுரேகா” என்று கத்தாதது மட்டும்தான் பாக்கி என்கிறார்கள்.
டோலிவுட்டில் தற்போது நம்பர் ஒன் நாயகியாக இருக்கும் சமந்தா தமிழில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கும் ‘ நீதானே என் பொன்வசந்தம்’ படத்தில் மட்டுமே ஒப்புகொண்டு நடித்து வருகிறார். மற்றபடி தெலுங்கு, தமிழ் இரண்டு மொழிகளுக்குமே 1 கோடி சம்பளம் என்பதில் கராராக இருக்கும் சமந்தா, மணிரத்தினம் கேட்டு விட்டார் என்றதும், தெலுங்குப் படத்துக்கு கொடுத்த கால்ஷீட்டை திரும்பப் பெற்று மணிரத்தினத்துக்கு கொடுத்திருகிறார் சமந்தா!
விரைவில் மணியின் பூக்கடை படக்குழு, பாரதிராஜாவின் புகழ்பாடும் முட்டம் கடற்கரை கிராமத்தில் 30 நாட்கள் நான் ஸ்டாப்பாக படப்பிடிப்பை தொடங்க இருக்கிறது.
Comments
Post a Comment
உங்கள் கருத்துக்கள் எதுவாக இருந்தாலும் இங்கே தெரிவிக்கலாம் ... நன்றி .....