மீண்டும் அணிக்கு திரும்புகிறார் யுவராஜ் சிங்?
ஆஸி.,யில் நடக்கும் டுவென்டி-20 மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் யுவராஜ் சிங்கிற்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி தற்போது டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதன் பின்னர் இரண்டு டுவென்டி-20 கிரிக்கெட் மற்றும் ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது. இதற்கான இந்திய அணி தேர்வு ஜனவரி 15ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. இது தொடர்பாக பி.சி.சி.ஐ., செயலாளர் சஞ்சய் ஜாக்தலே, தேர்வுக்குழு உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட
தேர்வுக்குழுவினர் சென்னையில் 15ம் தேதி இந்திய அணியை தேர்வு செய்ய நடக்கும் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. தேர்வுக்குழுவினர் 16 பேர் கொண்ட இந்திய அணியை தேர்வு செய்ய உள்ளனர். இம்முறை நுரையீரல் கேன்சரிலிருந்து மீண்ட யுவராஜ் சிங் மீண்டும் அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் யுவராஜ் சிங் நுரையீரல் கேன்சரால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். கடந்த வாரம் மீடியாக்களுக்கு பேட்டியளித்த யுவராஜ் சிங், தான் முற்றிலும் குணமடைந்து விட்டதாகவும், கடந்த இரண்டு வாரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment
உங்கள் கருத்துக்கள் எதுவாக இருந்தாலும் இங்கே தெரிவிக்கலாம் ... நன்றி .....