வங்கிக் கணக்கில் 49 ஆயிரம் கோடி ஆசிரியர் அதிர்ச்சி
தனது வங்கிக் கணக்கில் திடீரென 49 ஆயிரம் கோடி இருப்பு இருந்ததைக் கண்டு மேற்கு வங்க ஆசிரியர் ஒருவர் அதிர்ச்சி அடைந்தார்.
பலூர்கட்டில் உள்ள சக்ரம் பிரஜாலல் உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றும் பரிஜத் சஹா என்பவர் தனது வங்கிக் கணக்கில் இருந்து ரூ 10 ஆயிரம் எடுத்துவிட்டு நிலுவைத் தொகை எவ்வளவு உள்ளது என்று பார்த்துள்ளார். நிலுவைத் தொகை 49,570,08,17,538 என்று காட்டியுள்ளது. இதில் அதிர்ச்சி அடைந்த அவர் ஒருவாரம் யாரிடமும் தெரிவிக்கவில்லை. பின்னர் கமாரபரா எஸ்பிஐ வங்கிக்கிளையில் பணியாற்றும் நண்பர் ஒருவரிடம் இதைத் தெரிவித்துள்ளார். அவர் உடனடியாக இந்த விவகாரத்தை வங்கியின் மேலாளரிடம் தெரிவிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
நண்பரின் அறிவுரையை ஏற்று அவர் கணக்கு வைத்துள்ள பலூர்கட் எஸ்பிஐயின் மேலாளரிடம் இந்த விவகாரத்தை தெரிவித்துள்ளார்.
மேலாளர் உயர் அதிகாரிகளுக்கும், மும்பை ஐ.டி துறைக்கும் தகவல் அளித்தார்.
இதைத்தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் தொழில்நுட்பக் கோளாறால் இந்தத் தவறு நிகழ்ந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு சரிசெய்யப்பட்டது. இப்போது பிரச்னை ஒன்றுமில்லை என எஸ்பிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.
Comments
Post a Comment
உங்கள் கருத்துக்கள் எதுவாக இருந்தாலும் இங்கே தெரிவிக்கலாம் ... நன்றி .....