சட்டரீதியான நடவடிக்கையை சந்திக்க தயாராகுங்கள் : கூகுள் பேஸ்புக்கிற்கு PCI எச்சரிக்கை
இந்தியாவை பற்றி வெளியிட்டு வரும் ஆட்சேபணைக்குரிய கருத்துக்களை நீக்காவிடின் சட்டரீதியான நடவடிக்கையை சந்திக்க தயாராக
இருக்கும் படி கூகுள் இந்தியா, பேஸ்புக் நிறுவனங்களுக்கு இந்தியாவின் ஊடக கவுன்சில் (PCI) யின் நிர்வாக இயக்குனரும், நீதியரசருமான மார்கண்டே காத்யூ எச்சரித்துள்ளார்.
''குறித்த இணையத்தள நிறுவனங்கள் வெளியிடும் ஆட்சேபணைக்குரிய கருத்துக்கள் சமூக நல்லிணக்கத்துக்கு இடையூறு விளைவிப்பவை. ஊடக துறை அமைச்சர் கபில் சிபில் இது தொடர்பில் கூறிய கருத்துக்களுக்கு நானும் ஆதரவு தருகிறேன். தினமும் மிகப்பெரும் எண்ணிக்கையில் செய்திகள் வெளியிடும் இந்நிறுவனங்களிடமிருந்து ஆட்சேபணைக்குரிய சொற்களை மட்டும் நீக்கிவிடுவது கடினம் எனும் வாதத்தை நான் ஏற்க மாட்டேன்.
இந்தியாவில், ஏழ்மை, விவசாயிகளின் தற்கொலை என்பவை தொடர்வில் அவை அதிகமாக அலசுகின்றன. அதே போன்று நடிகர்கள், பிரபலங்களுக்கு குழந்தை கிடைத்தால், அதில் அதிகம் கவனத்தை செலுத்துகின்றன'' என அவர் குற்றம் சாட்டினார்.
ஊடகவியல மற்றும் சமூகத்தொடர்பாடலுக்கான மாகன்லால் சதுர்வேதி பல்கலைக்கழகத்தின் தேசிய கவுன்சில் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
Comments
Post a Comment
உங்கள் கருத்துக்கள் எதுவாக இருந்தாலும் இங்கே தெரிவிக்கலாம் ... நன்றி .....