கூடங்குளம் போராட்ட காரர்களுக்கு வெளிநாட்டு நிதியுதவி எப்படி கிடைக்கிறது மத்திய அரசு கேள்வி


கூடங்குளம் போராட்ட காரர்களுக்கு வெளிநாட்டு நிதியுதவி எப்படி கிடைக்கிறது என மத்திய அரசு நோட்டிஸ் அனுப்பியுள்ளதாகவும், மத்திய அரசை பின்பற்றி மாநில அரசும் போராட்ட காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞான தேசிகன் தெரிவித்தார்.

மதுரையில் காங்கிரஸ் கட்சியினரிடையே அவர் பேசிய போது இவ்வாறு தெரிவித்தார்.

மேலும்   முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழக மக்களின் நலன் சார்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி செயல்படும். மீனவர் தாக்குதல் பிரச்னையில் இலங்கை மீனவர்களும், தமிழக மீனவர்களும் சந்தித்துப் பேசியுள்ளனர். இதில் எட்டப்பட்டுள்ள மீன்பிடி உடன்பாடு குறித்து தமிழகம் வந்த பிரதமரை சந்தித்து தமிழக மீனவர் சங்க பிரதிநிதிகள் சந்தித்து மனு அளித்துள்ளனர். இதுதொடர்பாக மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது.

    கூடங்குளம் பிரச்னையில் போராட்டக்காரர்களுக்கு கிடைக்கும் வெளிநாட்டு நிதி குறித்து விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசு அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. எனவே மாநில அரசும், மத்திய அரசைப் பின்பற்றி கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்,

Comments

Popular posts from this blog

பிளாக்கரில் திருக்குறள் வெட்ஜெட் இணைக்க

பிளாக்கரில் youtube வெட்ஜெட் இணைக்க