ரஜினியின் புகழ்பெற்ற கேரக்டர் பெயரை தலைப்பாக்கிய கார்த்தி
சகுனிக்குப் பிறகு தான் நடிக்கும் அடுத்த படத்துக்கு ரஜினியின் புகழ்பெற்ற ஒரு கேரக்டர் பெயரையே தலைப்பாக்கியுள்ளார் கார்த்தி.
‘என் பேர கேட்டா அழுவுற குழந்தை கூட வாயை மூடும்’ என்பார் வில்லன்.
அதற்கு ரஜினி, ‘கண்ணா.. அதே குழந்தை கிட்ட என் பேரை சொல்லிப்பாரு… அவங்கம்மா வாயையும் சேர்த்து மூடும்,’ என்பார் ஹீரோ…
எந்தப் படம் புரிகிறதா… ஹாங்… எவர்கிரீன் ஆக்ஷன் படமான மூன்று முகம் படத்தில் வரும் ரஜினியின் அலெக்ஸ் பாண்டியன் கேரக்டர்தான்.
கார்த்தி நடிக்கும் அடுத்த படத்துக்கு ‘அலெக்ஸ் பாண்டியன்’ என்றுதான் பெயர் சூட்டியுள்ளனர். சுராஜ் இயக்குகிறார்.
கார்த்தியின் ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். ஏற்கெனவே ரஜினியின் படத் தலைப்புகளான படிக்காதவன், மாப்பிள்ளை போன்றவற்றை தனுஷுக்காகப் பயன்படுத்தியவர் சுராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment
உங்கள் கருத்துக்கள் எதுவாக இருந்தாலும் இங்கே தெரிவிக்கலாம் ... நன்றி .....