கமலின் தலைவன் இருக்கின்றானில் ஜாக்கி சான்


ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சான் பெயரைச் சொன்னாலே குட்டீஸ் எல்லாம் ஆ, ஊ என்று ஆரம்பித்துவிடுவார்கள். அவர் தனது நடிப்பால் குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
இந்நிலையில் இதுவரை ஹாலிவுட் மற்றும் சீன படங்களில் நடித்த ஜாக்கி சான் முதன்முறையாக கோலிவுட்டில் நடிக்கிறார். கமல் தலைவன் இருக்கின்றான் என்ற படத்தை இயக்குகிறார்
அல்லவா. அதில் நடிக்குமாறு கமல் ஜாக்கியை அணுகியுள்ளார். அவர் ஒப்புக் கொண்டாரா என்பது உறுதியாகத் தெரியவில்லை. மேலும் அவருக்கு என்ன மாதிரி கதாபாத்திரம் என்ற தகவலையும் கமல் கசிய விடவில்லை.
தசாவதாரம் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு ஜாக்கி சான் வந்தார் என்பது நினைவிருக்கலாம். அந்த விழாவில் அவர் கமல் ஹாசனின் நடிப்பை மனதாரப் பாராட்டினார்.
ஊழலை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்த படத்தை ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிக்கிறார்.

Comments

Popular posts from this blog

பிளாக்கரில் திருக்குறள் வெட்ஜெட் இணைக்க

பிளாக்கரில் youtube வெட்ஜெட் இணைக்க