அஜித்,விஜய் படத்திற்கு இசை அமைக்க முடியுமா ? இளையராஜா!


கோடம்பாக்கத்தின் ஹாட் டாபிக் இசைஞானி இளையராஜா கவுதம் மேனன் படத்திற்கு இசை அமைக்க ஒப்புக் கொண்டது தான். நிலைமை இப்படி இருக்க தற்கால திரைப்படங்கள் மீது இளையராஜாவுக்கு இன்னமும் ஏதோ சின்ன நெருடல் இருக்கத்தான் செய்கிறது என்பது அண்மையில் நடந்த “தோனி” பட ஆடியோ வெளியீட்டு விழாவில் அவர் பேசியதில் இருந்து அப்பட்டமாக தெரிகிறது.

பிரகாஷ்ராஜின் “தோனி” படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் அவரது குருநாதர் இயக்குநர் சிகரம் பாலச்சந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய இளையராஜா விஜய் – அஜித் படங்களில் வரும் பாடல்களை சூசகமாக கிண்டலடித்தார். அதுவும் மேடையில் தயாரிப்பாளர் சங்கத் தலைவரும் விஜய்யின் அப்பாவுமான எஸ்.ஏ.சந்திரசேகர் வீற்றிருந்த போதே…. இசைஞானி விஜய், அஜித் பாடல்களை கிண்டலடித்தது ஹைலைட்!
விழாவில் இளையராஜா பேசியதாவது : சிந்துபைரவி, படத்தில் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் பாடறியேன் படிப்பறியேன் பாடலுடன் தியாகராஜர் கீர்த்தனையை கலந்து தந்திருந்தேன். அதே மாதிரி கே.பாலச்சந்தர் இயக்கத்தில் சிரஞ்சீவி நடித்த தெலுங்கு படத்திலும் கர்நாடக சங்கீதத்தில் புரட்சி செய்திருந்தேன் என பாராட்டப் பெற்றேன். அந்த மாதிரி பாடல்கள் இப்போது இல்லையே என்கின்றனர். திரையிசையில் அத்தைகய புரட்சிகளை எனக்கு முன்பே பல இசையமைப்பாளர்கள் செய்திருக்கின்றனர். உதாரணத்துக்கு “மலர்ந்தும் மலராத பாதி மலர் போல” என்ற பாடலைப் போல் பல நல்ல பாடல்களை தந்திருக்கின்றனர். காலத்தால் அழியாமல் அவை இன்றும் ரசிகர்களை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.
ஆனால் அது மாதிரியான பாடல்களை இன்று விஜய் படத்திற்கும் அஜீத் படத்திற்கும் தரமுடியுமா ? அதை இன்றைய ரசிகர்கள் தான் ரசிப்பார்களா?! பாடல் என்பது உள்ளத்தையும் உயிரையும் உருக்கி உயரே எடுத்துச் செல்ல வேண்டும். இசையில் நீங்கள் எதிர்பார்க்காததை கொடுப்பவன் தான் இசையமைப்பாளன், நீங்கள் கேட்டதை கொடுத்தால் அது சரவண பவன்! இன்று திரை இசைப் பாடல்கள் இப்படி இருக்கிறதா? நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள் என பேசி முடித்தார் இளையராஜா!
மேடையில் ஒருவர் முகத்திலும் ஈ ஆடவில்லை!

Comments

Popular posts from this blog

தொழில்முறை வலைப்பதிவு எப்படி

கூகுள் அட்சென்ஸ் கிடைக்கவில்லையா

இணையத்தில் பணம் சம்பாதிக்க - 1