பில்லா இரண்டில் படத்தில் காஸ்ட்லி ஹெலிகாப்டர் ஃபைட்!


பில்லா இரண்டாம் பாகம் படத்தில் நடித்து முடித்துவிட்ட அஜித்தை அடுத்து இயக்கப் போகிறார்
`சிறுத்தை'  பட இயக்குனர் சிவா.  அஜித்துக்கு இவர் சொன்ன முதல் கதையே பிடித்துப்போனதால் செம குஷியாக அந்தப் படத்துக்கான திரைக்கதையை உருவாக்கத் தொடங்கி விட்டார். "எந்த மாதிரியான அஜித்தை திரைக்குத் தரப்போகிறீர்கள்?'' என்று சிவாவிடம் கேட்டால்
தொழில் நேர்த்தியான பதில் வருகிறது இயக்குனரிடமிருந்து…“ உலக அளவில் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர்கள் சிலரின் ஸ்டைல் ஆக்டிங்கை நான் அஜித்திடம் பார்க்கிறேன். அஜித்தின் இந்த தனித்துவமான திறமையை வெளிகொண்டும் வகையில்  என் இயக்கத்தில் அவரைப் பார்க்கலாம்.
அதற்கான திரைக்கதையை உருவாக்கத் தொடங்கும்போதே ஸ்டைலான அஜித் என் மனத்திரைக்குள் வந்து விட்டார்...'' என்கிறார்.
சிவா ஒருபக்கம் இப்படி மிரட்டிக்கொண்டிருக்க இன்னோரு பக்கம் பில்லா இரண்டிற்காக எடுக்கப்பட்டிருக்கும் ஒரு ஹெலிகாப்டர் பைட் பற்றி இப்போதே அணல் பறக்கிறது கோடம்பாக்கதில்! படத்தின் திரைக்கதைப்படி முதலில் ஹெலிகாப்டர் சேஸிங் மட்டுமே இருந்திருகிறது.
பிரேஸில் நாட்டில் ஹாலிவுட் ஆக்‌ஷன் கலைஞர்களைக் கொண்டு இந்த ஹெலிஹாப்டர் சேஸிங்கை எடுக்க திட்டமிட்டு இருந்தார்கள். பட்ஜெட்டில் இந்த செஸிங் மட்டும் 5 கோடியை விழுங்க தயாராக இருந்திருக்கிறது. இத்தனை செலவு செய்து ஒரு ஸ்கை செஸிங் எடுப்பதை விட இன்னும் கொஞ்சம் செலவு செய்து,
அந்த சேஸிங்கை ஸ்கை பைட் சீனாக எடுத்தால் என்ன என்றாராம் அஜித்! இயக்குனர் சக்ரிக்கு இந்த ஐடியா பிடித்துப் போக உடனடியாக தயாரிப்பாளரின் அனுமதி பெற்றி, ஹெலிஹாப்டர் சேஸிங் காட்சியை , சேஸிங் கம் ஸ்கை பைட் காட்சியாக ஏழுகோடி செலவில் எடுத்து முடித்திருகிறது பில்லா இரண்டாம் பாகத்தின் படக்குழு.
இந்திய சினிமாவிலோ, தமிழ்சினிமாவிலோ இதற்கு முன்பு இப்படியொரு பைட் இடம்பெற்றதே இல்லை என்கிறார்கள். விரைவில் நடக்க இருக்கும் பத்திரிகையாளர் சந்திப்பில் இந்த சேஸிங் மற்றும் பைட் சீன் பற்றியே பேசப்போகிறதாம். இதுவரை பில்லா படத்துக்கு 26 கோடி ரூபாய் செலவழித்திருகிறார்கள் என்று தகவல் கிடைக்கிறது.

இதற்கிடையில் ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில், விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜித், நயந்தாரா நடிக்கும் படத்தில் ஆர்யா-அமலா பால் இடம்பெற இருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திக்கு இயக்குனர் விஷ்ணுவர்த்தனோ,
தயாரிப்பாளர் தரப்போ மறுப்பு தெரிவிக்க வில்லை. இதுபற்றி உண்மை நிலையை அறிய, ஆர்யாவை தொடர்பு கொண்டபோது அவர் பதில் தராமல் மௌனம் காத்து வருகிறார். விரைவில் இந்தப் படம் பற்றிய அதிகார பூர்வ அறிவிப்பு அஜித் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதி சந்தேகம் இல்லை!

Comments

Popular posts from this blog

திருடர்களுடனும், குண்டர்களுடனும் கூட்டணி இல்லை : ராகுல் காந்தி தாக்கு

2012 இன் ஆஸ்கார் பரிந்துரைகள்

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை: விஜயகாந்த்