மின்வெட்டில் சாதனை - கருணாநிதி, மின்சாரம் வரும் போகும் என்ற நிலை - விஜயகாந்த்


தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது
இந்தியாவிலேயே தமிழ்நாட்டை முதலிடத்துக்கு கொண்டு வருவதே எனது லட்சியம் என்றார் முதலவர் ஜெயலலிதா. விவசாயமும், தொழில்களும் வளர்ந்தால்தான் தமிழ்நாட்டில் வளர்ச்சி ஏற்படும். அதற்கு மின்சாரம் இன்றியமையாதது.

ஆனால் எப்போது மின்சாரம் வரும், எப்போது போகும் என்ற நிலைதான் இன்று தமிழ்நாட்டில் உள்ளது. கோவையில் 8 மணி நேரம் அறிவிக்கப்படாத மின்வெட்டு என்கின்றனர். ஆனால் அது மேலும் பல மணி நேரம் நீடிக்கிறது.
இதை எதிர்த்து போராட்டம் நடக்கிறது. எப்போதுதான் மின்வெட்டு பிரச்னை நீங்கும் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதனால் வெளி மாநிலத்தவர்களும், நாட்டினரும் தமிழகத்தில் முதலீடு செய்ய தயங்குகின்றனர்.
மின்சாரமே கிடைக்காத சூழ்நிலையில் மின்சாரக் கட்டணத்தை அபரிமிதமாக உயர்த்துவதற்கு ஜெயலலிதா அரசு பரிந்துரைத்துள்ளது. இது பற்றி கருத்து கேட்கும் கூட்டத்தில் மக்கள் ஆவேசப்படுகின்றனர். ஜெயலலிதா அரசு இதை உணருமா, மக்களுக்கு பரிகாரம் விரைவில் கிடைக்குமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும்
மின்வெட்டு அதிகரித்துள்ளது தான் தமிழக அரசின் சாதனைக்கு எடுத்துக்காட்டு என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழக அரசின் பட்ஜெட்டில் 2012-ல் மின்வெட்டு குறையும் என்று கூறப்பட்டது. 2012- ஆம் ஆண்டில், 2013-ம் ஆண்டு முதல் மின்வெட்டு குறையும் என முதல்வர் கூறுயிருக்கின்றார். இந்நிலையில், 2013-ல் என்ன அறிக்கை வெளியிடப் போகிறார்களே எனக் கேள்வி எழுப்பினார்.

மின்வெட்டு காரணமாக 40 ஆயிரம் தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறிய கருணாநிதி, இதுதான் அரசின் சாதனைக்கு எடுத்துக்காட்டு தமிழக அரசின் நடவடிக்கையை குறித்து குற்றம் சாட்டியுள்ளார்.

Comments

Popular posts from this blog

தொழில்முறை வலைப்பதிவு எப்படி

கூகுள் அட்சென்ஸ் கிடைக்கவில்லையா

இணையத்தில் பணம் சம்பாதிக்க - 1