தலைவர்கள் புத்தாண்டு வாழ்த்து
ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில், நாட்டின் நலனுக்காக அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்படுகிற நிலை உருவாக வேண்டும் என்று தெரிவித்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த்: கடந்த கால கஷ்டங்கள் எல்லாம் தீர்ந்து எதிர்காலம் அமைதியையும் முன்னேற்றத்தையும் தர வேண்டும்.