25 லட்சம் கொடுங்க... தனுஷின் புது டாரிஃப்


dhanushஅடிக்கடி பாலிவுட் பக்கம் தென்படுகிறார் தனுஷ். ஏதோ அபிஷேக் பச்சன்,ஷாரூக்கான் போன்ற முன்னணி ஹீரோக்களிடம் கால்ஷீட் கேட்க போயிருக்கிறார் என்பது போல தமிழ்நாட்டில் பில்டப் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். தப்பான மெட்டு தவறிப் போய் ஹிட்டாவது மாதிரி, இந்த பில்டப்புக்கும் ஒரு வடிவம் கொடுத்துவிட்டார்கள் பத்திரிகைகளில். அதாவது, தனுஷ் அடிக்கடி பாலிவுட் பக்கம் செல்வது அவர் இயக்கப் போகும் முதல் படத்தின் ஹீரோவை தேடுவதற்காகதான் என்பது போல. உண்மையில் என்ன நடக்கிறது அங்கே?
ஏ.ஆர்.ரஹ்மானின் வந்தேமாதரம் பாடலுக்கு விஷுவ
ல் அமைத்துக் கொடுத்த பரத்பாலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கிறாராம். முதலில் கமலிடம் கால்ஷீட் கேட்டிருந்த பரத்பாலா, கொய்யாக்காய் சிறுத்து சுண்டைக்காயானது போல தனுஷ் வரைக்கும் வந்துவிட்டார். அவரது அழைப்பை கர்ம சிரத்தையாக ஏற்றுக் கொண்ட தனுஷ், இந்த புதிய படத்தி
ன் டிஸ்கஷனுக்காகதான் அவ்வப்போது பாலிவுட் பக்கம் போகிறாராம்.
தனுஷ் பற்றி இன்னொரு ஆச்சர்யமான தகவல். இவர் பாடிய வொய் திஸ் கொலவெறிடி உலகம் முழுக்க பாப்புலர் ஆகிவிட்டதல்லவா? பல்வேறு நாடுகளில் இருந்தும் இவரை பாட அழைக்கிறார்களாம். எந்த நாட்டிலிருந்து இவரை பாட அழைத்தாலும் ஓ.கே என்கிறாராம் தனுஷூம். ஆனால் ஒருமுறை பாட 25 லட்சம் சன்மானத்தை நிர்ணயித்துவிட்டார். இதற்காக முன்னாலேயே வாங்கியிருக்கும் அட்வான்சை கூட்டிக்கழித்து பார்த்தால் மூன்று பட சம்பளத்தை தாண்டும் என்கிறார்கள் இப்போதே.

Comments

  1. kodumaiyilum kodumai. 25 paisa kooda peradhu ivan paatu.

    ReplyDelete

Post a Comment

உங்கள் கருத்துக்கள் எதுவாக இருந்தாலும் இங்கே தெரிவிக்கலாம் ... நன்றி .....

Popular posts from this blog

திருடர்களுடனும், குண்டர்களுடனும் கூட்டணி இல்லை : ராகுல் காந்தி தாக்கு

2012 இன் ஆஸ்கார் பரிந்துரைகள்

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை: விஜயகாந்த்