நிர்வாணமாக ஓடிய 12 வாலிபர்கள்

உலகம் முழுவதும் உள்ள ஆறுகளை சுத்தப்படுத்த வேண்டும்., உலகை சுத்தமாக காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கைக்காக பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் 12 வாலிபர்கள் நிர்வாணமாக ஓடினார்கள்.


அங்கு நடந்த ஆண்டு விழாவின் போது, இந்த வாலிபர்கள் தங்கள் முகத்தில் முகமூடி அணிந்த படி, கோரிக்கைகள் அடங்கிய போர்டுகளை பிடித்த படி பல்கலைக்கழக மண்டபம் வழியாக ஓடியதை திரளான பேர் பார்த்து ஆச்சரியப்பட்டனர்.

மணிலாவில் மட்டும் 20 ஆறுகள் மாசு பட்டு இருப்பதாகவும், அவற்றை உடனே சுத்தப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோஷமிட்டனர். சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பை சேர்ந்த இவர்கள், ஒவ்வொரு ஆண்டும் நூதன போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த ஆண்டு அவர்கள் நிர்வாண ஓட்டம் நடத்தி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    

Comments

Popular posts from this blog

திருடர்களுடனும், குண்டர்களுடனும் கூட்டணி இல்லை : ராகுல் காந்தி தாக்கு

2012 இன் ஆஸ்கார் பரிந்துரைகள்

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை: விஜயகாந்த்