தமிழ் மக்களுக்கு அரசியல் பிரச்சினை உண்டு என்பதை ஏற்கிறோம் : ஜே.வி.பியின் மாற்றுக் குழு


தமிழ் மக்களுக்கு அரசியல் பிரச்சினை ஒன்று இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்வதாக ஜேவிபியின் மாற்று குழுவினரான மக்கள் போராட்ட இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று முன் தினம் யாழ் நகரில் அவர்கள் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

'தமிழ் மக்களின் அரசியல் உரிமை பேச்சுக்களை தென்னிலங்கை மக்கள் அரசியல் ரீதியாக நோக்காமல் அதுவொரு பிரிவினைவாதமாக பார்க்கிறார்கள். இதற்கு முன்னைய தற்போதைய அரசுக்கள், சிங்கள மக்களை தவறாக வழிநடத்தியதே காரணமாகும். இலங்கையில் யுத்தம் முடிவடைந்துள்ள போதும் இன்னமும் பல பிரச்சினைகள் தீர்க்கப்படாமலே உள்ளது.

இந்நாட்டில் முதலில் இரண்டு இனங்களுக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும். அதன் பின்னர் தமிழர்களின் அரசியல் பிரச்சினைகள் குறித்து பேசவேண்டும்.

அண்மையில் இடம்பெயர்ந்தோர் முகாம்களுக்கு அரச அனுமதியுடனேயே செல்வதற்கு முற்பட்டோம். ஆனால் முகாமில் உள்ள படையினர் எமக்கு அனுமதி தர மறுத்துவிட்டனர். இதன் மூலம் அங்கு தனிநபர் பாதுகாப்பு எப்படி இருக்கும் என்பதனை என்பது எமக்கு தெரிகிறது.

இடம்பெயர்ந்தோர் மீள் குடியமர்த்தப்பட்ட பகுதிகளிலும், அரசாங்கம் கூறுவது போன்று நிலைமைகள் இல்லை. அரசாங்கம் தொடர்ந்து பொய் கூறிக்கொண்டிருக்கிறது.'

இவ்வாறு மக்கள் போராட்ட இயக்க்த்தின் குழுவினர் தெரிவித்தனர். இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் இயக்கத்தின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அஜித் குமார, தேசிய ஒருங்கிணைப்பாளர் சாமிர கொஸ்வத்த, சர்வதேச உள்ளூர் பெண்கள் செயற்பாட்டாளர் திமுத்து ஆட்டிகல என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

Comments

Popular posts from this blog

திருடர்களுடனும், குண்டர்களுடனும் கூட்டணி இல்லை : ராகுல் காந்தி தாக்கு

2012 இன் ஆஸ்கார் பரிந்துரைகள்

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை: விஜயகாந்த்