இந்திய மாணவரை கொன்ற சிறுவனுக்கு 13 ஆண்டு சிறை
இந்தியாவை சேர்ந்த நிதின் கார்க் என்ற மாணவர் ஆஸ்ட்ரேலியாவில் பயின்று வந்தார்.
இந்நிலையில், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் தேதி மெல்பர்னில் உள்ள உணவு விடுதியில் சாப்பிட்டு விட்டு வெளியில் வந்தார்.
அப்போது 15 வயது சிறுவன் ஒருவன், கத்தியால் நிதினை சரமாரியாக குத்தி கொலை செய்தான்.அவரிடம் இருந்த கைபேசி மற்றும் பணத்தை கொள்ளை அடித்து சென்றான்.
இதனையடுத்து நிதினை கொன்ற சிறுவனை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு மெல்பர்ன் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றவாளியான சிறுவனுக்கு 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
Comments
Post a Comment
உங்கள் கருத்துக்கள் எதுவாக இருந்தாலும் இங்கே தெரிவிக்கலாம் ... நன்றி .....