மீண்டும் வருகிறார் வடிவேலு...!

தவளை தன் வாயால் கெடுவது போல, நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், திமுக.,வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதாக சொல்லி எக்கு தப்பா பேசி, சினிமா வாய்பே இல்லாத அளவுக்கு தள்ளப்பட்டார் நடிகர் வடிவேலு. இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர், மீண்டும் திரையில் வரப்போகிறார் வடிவேலு. நடிகர் பிரசாந்த் நடிப்பில், அவரது அப்பா தியாகராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள மம்பட்டியான் படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் வடிவேலு. படம் முழுக்க பிரசாந்த் உடன் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடத்தில் வருகிறார் வடிவேலு. வடிவேலுவின் இந்தவேடம், ஒரிஜினல் படமான மலையூர்
மம்பட்டியானில் கவுண்டமணி செய்த மைனர் வேடமாகும்.

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, எந்த ஒரு டைரக்டரும் வடிவேலுவை வைத்து இயக்க முன்வராத நிலையில், தியாகராஜன் மட்டும் வடிவேலுவை வைத்து தைரியமாக படத்தை இயக்கியுள்ளார். ஏற்கனவே வின்னர் படத்தில் பிரசாந்த் உடன் வடிவேலு நடித்த காமெடி மிக பிரபலம். அதன்படியே இந்தபடத்திலும் வடிவேலுவை நடிக்க வைத்திருக்கிறார் தியாகராஜன். 

இப்படம் வருகிற 16ம் தேதி முதல் உலகமெங்கும் ரிலீசாக இருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு வருடமாகவே வடிவேலுவை திரையில் பார்க்காமல் ஏங்கி தவித்த ரசிகர்களுக்கு, இந்த படம்  பழைய சரவெடி வடிவேலுவை நிச்சயம் பிரதிபலிக்கும் என நம்பலாம்.

Comments

Popular posts from this blog

திருடர்களுடனும், குண்டர்களுடனும் கூட்டணி இல்லை : ராகுல் காந்தி தாக்கு

2012 இன் ஆஸ்கார் பரிந்துரைகள்

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை: விஜயகாந்த்