‘ஐஸ்’ குழந்தை போட்டோவுக்கு பல கோடி ரூபாய் பேரம்


உலக அழகி ஆன பிறகுதான் ஐஸ்வர்யாராய் கோடிகளில் சம்பாதிக்க ஆரம்பித்தார். அவரது குழந்தையோ பிறந்தவுடனே கோடிகளை சம்பாதிக்க தயாராக உள்ளது. ஐஸ்வர்யா ராய்க்கு கடந்த மாதம் பெண் குழந்தை பிறந்தது. ஆஸ்பத்திரியில் குழந்தையுடன் ஐஸ்வர்யா ராய் இருப்பதுபோன்ற மார்பிங் படம் இன்டர்நெட்டில் உலா வந்தது. அது வெட்டி ஒட்டப்பட்ட படம் என்று தெரிவித்தார் அமிதாப்பச்சன். இந்நிலையில், ஐஸ் குழந்தையின் போட்டோவை யார் முதலில் வெளியிடுவது என்ற போட்டி மும்பை பத்திரிகை, மீடியாக்கள் மத்தியில் நிலவுகிறது.
ஐஸ்வர்யா உலகப்புகழ் பெற்றவர் என்பதால், வெளி நாட்டு மீடியாக்களும் குதித்திருக்கின்றன. கோடிக்கணக்கில் பணம் கொடுத்து வாங்கி, குழந்தையின் போட்டோவை வெளியிட அவை பேரம் பேசி வருகின்றன. இதுவரை அமிதாப் மசியவில்லை. அதிக பணம் தரும் பெரிய மீடியா நிறுவனங்களுக்கு பேத்தி படத்தை அமிதாப் தர வாய்ப்பு இருப்பதாக பாலிவுட்டில் தகவல் பரவுகிறது.


             மக்களுக்கு ஐஸ் வாங்கவே வழி இல்லையாம் பொறந்த அன்றே கோடி வருமாணமாம் குடுத்து வச்ச குழந்தை ....................

Comments

Popular posts from this blog

திருடர்களுடனும், குண்டர்களுடனும் கூட்டணி இல்லை : ராகுல் காந்தி தாக்கு

2012 இன் ஆஸ்கார் பரிந்துரைகள்

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை: விஜயகாந்த்