உண்ணாவிரதம் தொடங்கினார் ஹசாரே

 அன்னா ஹசாரே இன்று காலை 11 மணிக்கு மும்பை பந்த்ரா குர்லா வளாகத்தில் உள்ள எம்.எம்.ஆர்.டி.ஏ. மைதானத்தில் தனது 3 நாள் உண்ணாவிரதம் தொடங்கினார். 

அதற்கு முன் அன்னா ஹசாரே இன்று காலை ஜூகு கடற்கரைக்கு சென்று அங்குள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினார். பிறகு அவர் உண்ணாவிரத மைதானத்துக்கு பேரணியாக வந்தார். வழி நெடுகிலும் மக்கள் கூடி நின்று அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.



மைதானம் வந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. மைதானத்தில் ஆயிரகணக்கன் மக்கள் கைகளில் தேசிய கொடியை ஏந்திய படி காலையில் இருந்து கடும் பனியையும் பொருட்படுத்தாமல் காத்து இருக்கிறார்கள். மைதானத்தில் உயரமான மேடை அமைக்கப்பட்டு இருந்தது .அதில் தனது உண்ணாவிரதத்தை அன்னா ஹசாரே தொடங்கினார். அன்னாஹசாரே உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை எச்சரித்திருந்ததால், அவருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மைதானத்தை சுற்றி 2 ஆயிரம் போலீசார் நிறுத் தப்பட்டுள்ளனர்

Comments

Popular posts from this blog

திருடர்களுடனும், குண்டர்களுடனும் கூட்டணி இல்லை : ராகுல் காந்தி தாக்கு

2012 இன் ஆஸ்கார் பரிந்துரைகள்

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை: விஜயகாந்த்