மாணவி தற்கொலை ஆபாச படம் எடுத்து இணையதளத்தில் வெளியிட்டதாக மாணவர்கள் மீது புகார்

ஆபாச படம் எடுத்து இணையதளத்தில் வெளியிட்டதால் மாணவி தற்கொலை செய்து கொண்டதாகக்கூறி அவரது உடலை சாலையில் போட்டு உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

கும்மிடிப்பூண்டியை அடுத்த பாதிர்வேடு என்ற இடத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் ஒரு மாணவியிடம், அதே பள்ளியில் படிக்கும் சில மாணவர்கள் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அந்த சம்பவத்தை அந்த மாணவர்கள் படம் எடுத்து இணைய தளத்தில் பரவ விட்டதாகவும் தகவல் வெளியானது. இதனால் பெற்றோர்கள் அந்தப் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து, மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறப்பட்ட 5 மாணவர்களுக்கும் மாற்றுச் சான்றிதழ் கொடுத்து பள்ளியை விட்டு பள்ளி நிர்வாகம் நீக்கியது.



இதற்கிடையே, பாதிரிவேடு அரசு மேல் நிலைப்பள்ளியில் 11 ம் வகுப்பு படித்து வந்த திலகவதி (வயது 16) என்ற மாணவி வீட்டில் யாரும் இல்லாதபோது மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் பாதிர்வேடு அருகே உள்ள செதில்பாக்கம் கிராமத்தை சேர்ந்த குமாரின் மகள்.

இது குறித்து குமார் பாதிரிவேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரில் கூறி இருப்பதாவது: 

"எனது மகள் திலகவதி. அவர் படித்து வந்த அரசுப்பள்ளியில் 12 ம் வகுப்பு படித்த 5 மாணவர்கள் எனது மகளிடம் தகாத முறையில் நடந்து, அதனை படம் எடுத்து இண்டர்நெட்டில் பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த என்னுடைய மகள் திலகவதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். எனது மகளின் சாவுக்கு காரணமான 5 மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.'' இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

சம்பவ இடத்திற்கு கும்மிடிப்பூண்டி போலீஸ் துணை சூப்பிரண்டு குமார் தலைமையில் பாதிரிவேடு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

மாணவி திலகவதியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிவடைந்ததும்,  மாணவியின் சாவுக்கு காரணமான 5 மாணவர்களை கைது செய்தால்தான் உடலை வாங்குவோம்' என்று உறவினர்கள் பொன்னேரி அரசு ஆஸ்பத்திரி முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனையடுத்து போலீசார் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அவர்களிடம் மாணவி திலகவதியின் உடலை ஒப்படைத்தனர்.

நேற்று பிற்பகல் 3 மணியளவில் மாணவி திலகவதியின் உடலை வீட்டுக்கு எடுத்துச் சென்றனர். மாதர்பாக்கம் பஸ் நிலையம் அருகே செல்லும்போது சத்யவேடு கூட்டுச்சாலையில் மாணவி திலகவதியின் உடலை வைத்து உறவினர்களும் பொதுமக்களும் திடீர் என்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மாணவியின் தற்கொலைக்கு காரணமான மாணவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். அந்த அரசுப் பள்ளி மீது நடவடிக்கை எடுத்து அங்கு உள்ள ஆசிரியர்களை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும்' என்று கோஷம் எழுப்பினார்கள்.

போலீஸ் துணை சூப்பிரண்டு குமார் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.  மாணவியின் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட கல்வி அதிகாரியிடம் பேசி அந்த பள்ளி ஆசிரியர்கள் இடமாற்றத்திற்கான நடவடிக்கை எடுக்கப்படும்' என்று உறுதி அளித்தார்.

இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் சுமார் 5 மணியளவில் கலைந்து சென்றனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இன்ஸ்பெக்டர் வேணுகோபால் தலைமையில் 3 தனிப்படையினர் மாணவியின் சாவுக்கு காரணமானவர்களை தேடி வருகின்றனர்.

ஒட்டு போடுங்கள் நண்பர்களே ............நன்றி....................


Comments

Popular posts from this blog

திருடர்களுடனும், குண்டர்களுடனும் கூட்டணி இல்லை : ராகுல் காந்தி தாக்கு

2012 இன் ஆஸ்கார் பரிந்துரைகள்

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை: விஜயகாந்த்