இந்த கூட்டத் தொடரிலேயே லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் : அன்னா ஹசாரே
நாடாளுமன்றத்தின் இந்தக் கூட்டத் தொடரிலேயே லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே .
கோரிக்கை விடுத்துள்ளார். எனவே, லோக்பால் மசோதா, வரும் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
ரஷ்யப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மன்மோகன் சிங், நாடு திரும்பியதும் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து பேசிய ஹசாரே, லோக்பால் மசோதாவை எதிர்க்கும் எம்.பி.க்கள் வீடு முன்பாக போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்துள்ளார். லோக்பால்
நிறைவேற்றப்படவில்லை என்றால் சோனியா காந்தி வீட்டின் முன் தாமே போராடப் போவதாகவும் அவர் எச்சரித்துள்ளார். லோக்பால் மசோதாவை தாக்கல்
செய்வதில் உறுதியாக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த மசோதா நாடாளுமன்றத்தின் இந்தக் கூட்டத் தொடர் முடிவடைவதற்குள் தாக்கல்
செய்யப்படும் என்று அரசு கூறியுள்ளது.
மேலும், வரும் 20 அல்லது 21-ஆம் தேதிக்குள் லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்படும் என்று நாடாளுமன்ற அலுவல் துறை அமைச்சர் பவன்குமார் பன்சால்
தெரிவித்துள்ளார். ஒரே நாளில் விவாதம் நடத்தி, கூட்டத் தொடர் முடிவதற்குள் மசோதாவை நிறைவேற்றிவிடலாம் என்று நம்புவதாக அவர் கூறினார்.

Comments
Post a Comment
உங்கள் கருத்துக்கள் எதுவாக இருந்தாலும் இங்கே தெரிவிக்கலாம் ... நன்றி .....