அஜித்தை வைத்து விஷ்ணுவர்தன் இயக்க இருக்கும் புதிய படத்தில், அஜித்துக்கு ஜோடியாக நயன்தாராவும், கூடவே இன்னொரு முக்கிய ரோலில் ஆர்யா நடிக்க போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2007ம் ஆண்டு விஷ்ணுவர்தன் இயக்கத்தில், அஜித் நடித்த பில்லா படம் மாபெரும் ஹிட்டானது. தொடர்ந்து அஜித்தை வைத்து பில்லா-2 படத்தையும் விஷ்ணுவர்தன் தான் இயக்குவதாக இருந்தது. ஆனால் இடையில் தெலுங்கு பட பிஸியால், விஷ்ணுவர்தன் அந்த படத்தை இயக்க முடியாமல் போனது. இதனையடுத்து அந்த பொறுப்பை உன்னைப்போல் ஒருவன் சக்ரி டோல்டி ஏற்றார். தற்போது இப்படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது, கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது.