தனுஷின் 'Why This கொலவெறி' பாடலுக்கு யூடியூப் இணையதளம் தங்க மெடல் கொடுத்து அங்கீகாரம்!


தனுஷின் 'Why This Kolaveri' புரோமோ பாடலுக்கு, யூடியூப் நிறுவனம்
கடந்த 7 நாட்களில் அதிகம் பார்வையிடப்பட்ட வீடியோக்கள் பட்டியலில் தங்க பதக்கம் கொடுத்துள்ளது. மேலும் 'பிரபலமாகி வரும் பாடல்கள் பட்டியலில் வெண்கல பதக்கத்தையும் வழங்கியுள்ளது. ஐஷ்வர்யா தனுஷ் இயக்கத்தில் தனுஷ் ஸ்ருதி ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் '3' படத்திற்காக இப்பாடல் புரோமாவாக படமாக்கப்பட்டது.

நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ் சினிமா பாடலொன்று யூடியூப்பில் வேகமாக முன்னிலை பெற்று வருவதற்கு, அப்பாடலின் கிராமத்திய மெட்டு, ஆங்கில மொழிக்கலவை, படம்பிடித்த விதம், தனுஷின் குரல், இளைஞர்களுக்கு சார்பான இலகுவில் புரிந்து கொள்ள கூடிய வரிகள் என பல காரணங்கள் சொன்னாலும், அதெல்லாம் இல்லை... Sony Music இன் புரோமோதான் என்கிறார்கள் பலர்.

இதுவரை இந்த கொலவெறி பாடலை யூடியூப்பில் பார்த்தவர்கள் எண்ணிக்கை 14 மில்லியனை தாண்டியுள்ளது. இது Sony Music india இன் உத்தியோகபூர்வ தளத்திலிருந்து பெறப்பட்ட எண்ணிக்கை பதிவு. பலர் தமது தனிப்பட்ட யூடியூப் சேனலிலும் இப்பாடலை பதிவேற்றம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.  மேலும் பலர் வயலின் வேர்ஷன், கிட்டார் வேஷன், Female வேர்ஷன் என தமக்கு பிடித்த மாதிரியெல்லாம் இதே பாட்டை பல்வேறு கோணங்களில் படம்பிடித்து பதிவு செய்ய தொடங்கிவிட்டார்கள்.

அண்மையில் மத்திய அமைச்சர் ஷரத் பவார் மீது சீக்கியர் ஒருவர் கன்னத்தில் அறைந்தது, தமிழக முதல்வர் மற்றும் திமுக தலைவர் ஆகியோரை மையமாக வைத்து வெளிவந்த இப்பாடலின் வேர்ஷன்களும், அநியாயமாக படுஹிட்டாகி வருகின்றன.

இணையத்தில் உலாவும் தமிழர்களில் யாரும் இந்த பாடலை இதுவரை பார்க்காமல் விட்டிருக்க மாட்டீர்கள். அப்படி பார்க்க தவறியிருந்தால் அப்பாடலின் வீடியோ காட்சியும், அப்பாடல் அறிமுக விழா காட்சிகளும் கீழ் இணைக்கப்பட்டுள்ளன. (இப்பாடலின் முழு வரிகளையும் தமிழிலும் ஒருவர் பாடியிருக்கிறார். அதையும் கீழ் உள்ள இணைப்பில் காண்க)
அப்பாடலின் அறிமுக விழா



தனுஷ் பாடிய பாடலில் ஏன் ஆங்கிலத்தை கலந்து, இப்படி தமிழை கொலை செய்திருக்கிறார் என ஆதங்கப்படுபவர்களுக்காகவே, ஒருவர் முழு பாடலையும் தமிழில் பாடியிருக்கிறார்...



Comments

Popular posts from this blog

பிளாக்கரில் திருக்குறள் வெட்ஜெட் இணைக்க

பிளாக்கரில் youtube வெட்ஜெட் இணைக்க