தல ரசிகர்களுக்கு தலப்பாக்கட்டு பிரியாணி !


அஜீத்தை ‘ பில்லா ‘ படத்தில் மிகவும் ஸ்டைலாக காட்டியவர் இயக்குனர் விஷ்ணுவர்தன். மீண்டும் இக்கூட்டணி இணைய இருக்கிறது. ஏ.எம்.ரத்னம் தயாரிக்கும் படத்தில் அஜீத்தை இயக்க இருக்கிறார் விஷ்ணுவர்தன்.
மீண்டும் இக்கூட்டணி இணைந்து இருப்பது இப்போதே மிகந்த எதிர்ப்பார்ப்பு இருக்கும் நிலையில், விஷ்ணுவர்தனிடம் ஒரு மினி பேட்டி!
பஞ்சா படத்தினை அஜீத்தை வைத்து ரீமேக் பண்ண இருக்கிறீர்களா ?

கண்டிப்பாக இல்லை. அஜீத் நடிக்க நான் இயக்க இருக்கும் படத்திற்கு இப்போது தான் கதை எழுதி வருகிறேன். பஞ்சா படத்தினை தமிழ் ரீமேக் செய்யும் எண்ணம் எல்லாம் இல்லை. தமிழில் ‘குறி’ என்னும் பெயரில் அப்படம் வெளிவரும்.
மீண்டும் அஜீத்துடன் இணைவது குறித்து ?
மிகந்த சந்தோஷத்தில் இருக்கிறேன். கண்டிப்பாக அப்படம் ‘பில்லா’வை மிஞ்ச வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.
அஜீத்தை எந்த மாதிரி காட்ட இருக்கிறீர்கள்?
இன்னும் படத்தின் கதையை நான் எழுதியே முடிக்கவில்லை. அதற்குள் கேட்டால் நான் எப்படி சொல்வது. கண்டிப்பாக அஜீத் ரசிகர்களுக்கு தீனி போடும் விதத்தில் இந்த படம் இருக்கும்.
நீரவ் ஷாவை அறிமுகப்படுத்தியவர் நீங்கள். அவரது வளர்ச்சியை எப்படி பார்க்கிறீர்கள் ?
(சிரித்தபடியே) சந்தோஷமாக தான் பார்க்கிறேன். எனது படத்திற்கு கால்ஷீட் கேட்டால் கூட தேதிகள் இல்லை என்று கூறுகிறார். அவ்வளவு பிஸி. (சிரிக்கிறார் ) திறமையான கலைஞர் என்பதால், பிஸியாக இருக்கிறார்.
யுவன் – விஷ்ணுவர்தன் கூட்டணி என்றால் பாடல்கள் சூப்பர் ஹிட். அதற்கு என்ன காரணம் ?
யுவன் எனக்கு என்று ஸ்பெஷலாக பாடல்கள் செய்வது இல்லை. என்னவென்றால் நான் அவரது இசையில் தலையிடுவது இல்லை. அது கூட ஒரு காரணமாக இருக்கலாம்.

Comments

Popular posts from this blog

பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு

சட்டரீதியான நடவடிக்கையை சந்திக்க தயாராகுங்கள் : கூகுள் பேஸ்புக்கிற்கு PCI எச்சரிக்கை

நான் நடிப்பதை நிறுத்தவில்லை – நமீதா