சாமியார்களின் அராஜகங்களை வெளியில் கொண்டுவரும் ஷகீலா படத்துக்கு சாமியார்கள் எதிர்ப்பு!
போலி சாமியார்களின் அராஜகங்களை தோலுரித்துக் காட்டும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் ஷகீலா நடித்திருக்கும் ஆசாமி என்ற படத்திற்கு சாமியார்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஏழுமலையான் மூவிஸ், லலிதா பிக்சர்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ஆசாமி. சந்தான பாரதி, ஷகிலா, அனுமோகன், பாண்டு ஆகிய 4 பேர்களும் போலி சாமியார்களாக நடித்துள்ளனர். சட்டத்தில் இருந்தும், சமுதாயத்தில் இருந்தும் தந்திரமாக தப்பிக்கும் இவர்களை, அம்மன் அருள் பெற்ற 16 வயது பெண் அழிப்பது போல் கதை அமைக்கப்பட்டு இருக்கிறது.
அம்மன் அருள் பெற்ற பெண்ணாக புதுச்சேரியை சேர்ந்த பிரியங்கா நடித்து இருக்கிறார். ஆண்டாள் ரமேஷ் படத்தை இயக்கியிருப்பதுடன், புதுச்சேரி செந்தாமரை கண்ணனுடன் இணைந்து படத்தை தயாரித்து இருக்கிறார். சென்னை, புதுச்சேரி, வடலூர், நெய்வேலி ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று முடிவடைந்தது. இந்த படத்துக்கு சாமியார்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். படத்தை திரைக்கு கொண்டுவர விடமாட்டோம் என்று கூறி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment
உங்கள் கருத்துக்கள் எதுவாக இருந்தாலும் இங்கே தெரிவிக்கலாம் ... நன்றி .....