ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில், நாட்டின் நலனுக்காக அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்படுகிற நிலை உருவாக வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்: கடந்த கால கஷ்டங்கள் எல்லாம் தீர்ந்து எதிர்காலம் அமைதியையும் முன்னேற்றத்தையும் தர வேண்டும். போனது புயலாக இருக்கட்டும். வருவது தென்றலாக இருக்கட்டும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்: மதசார்பின்மை,மக்களிடையே நல்லிணக்கம், மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த செயலாற்ற வேண்டும்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காகவும் ஒவ்வொருவரும் கனவு காண வேண்டும். நம் கனவை நிறைவேற்ற புதிதாகப் போராடுவோம்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: முல்லைப் பெரியாறு உரிமை காக்க கட்சி, ஜாதி, மத எல்லைகள் கடந்து தமிழகம் கொந்தளித்து எழுந்துள்ள நிலைமை எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கை ஊட்டுகிறது. ஊழலற்ற அரசியல் தமிழகத்தில் வெற்றி காணவும் 2012-ம் ஆண்டு பாதை அமைக்கட்டும்.
சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் ஆர் சரத்குமார்: இந்திய ஒருமைப்பாட்டிற்கும் இறையாண்மைக்கும் எந்த வகையிலும் அச்சுறுத்தல் இல்லாத வகையில் மாநிலங்களுக்கிடையே நல்லுறவு, மக்களிடையே ஒற்றுமை மற்றும் சகோதரத்துவம் மேலோங்க வேண்டும்.
திராவிடர் கழகத் தலைவர் வீரமணி: அனைவருக்கும் அனைத்தும் தரும் அன்பு பொழியும் ஆண்டாக மலரட்டும்.
தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் எம்.யுவராஜா: உலகளவில் வல்லரசு நாடாக இந்தியா முன்னேற இளைஞர்களாகிய நாம் தோள் கொடுக்க வேண்டும்.
மேலும், மத்திய முன்னாள் அமைச்சர் சு.திருநாவுக்கரசர், தமிழ்நாடு வர்த்தகர் காங்கிரஸ் தலைவர் எச்.வசந்தகுமார், கார்த்தி சிதம்பரம், தமிழக ஜனதா தளம் மாநிலப் பொதுச்செயலாளர் க.ஜான்மோசஸ், அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழக நிறுவனர் தலைவர் ந.சேதுராமன், இந்திய தேசிய முஸ்லிம் லீக் மாநிலத் தலைவர் ஜவஹர் அலி, தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் எஸ்.ஷேக் தாவூத், தமிழ்நாடு பால் முகவர்கள் நலச்சங்க மாநில தலைவர் எஸ்.ஏ.பொன்னுசாமி, அகில இந்திய கட்டடத் தொழிலாளர் மத்திய சங்க பொதுச்செயலாளர் மு.பன்னீர்செல்வம், தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர்கள் சங்க தலைவர் சேம.நாராயணன், மக்கள் முன்னணி மாநிலத் தலைவர் குமரி அருண், புதிய நீதி கட்சி நிறுவனர்-தலைவர் ஏ.சி.சண்முகம், ஐக்கிய ஜனதா தள மாநில தலைமை பொதுச்செயலாளர் ராஜகோபால் ஆகியோரும் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
குடியிருப்புகளின் அருகில் அதிக மாசுபடுத்தும் (சிகப்பு மற்றும் ஆரஞ்சு வகை) எந்த ஒரு தொழிற்சாலையும் அமைய அனுமதிக்க கூடாது தேசிய பசுமைத் தீர்ப்பாயம் NGT says polluting industries not allowed in residential area, பசும...
அஜீத் நடிக்கும் பில்லா 2 படத்தின் வெளிநாட்டு உரிமை, இதுவரை அவரது படங்கள் விற்காத அளவு 1 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டுள்ளது. அஜீத்தின் பில்லா 2 படப்பிடிப்பு நிறைவுக் கட்டத்தை அடைந்துள்ளது. இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு உள்ளதால், படத்தை வாங்க உள்ளூரில் பெரும் போட்டி ஏற்பட்டுள்ளது.
சினிமாவிலிருந்து விலகிவிட்டதாகவும் கட்டுமானத் தொழிலில் முழு கவனம் செலுத்துவதாகவும் வந்த செய்திகளை மறுத்துள்ளார் நடிகை நமீதா. நடிகை நமீதா குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்தவர். 2002-ல் சினிமாவில் அறிமுகமானார். விஜயகாந்த் ஜோடியாக நடித்த முதல் தமிழ் படம் எங்கள் அண்ணா சூப்பர் ஹிட்டானது.
Comments
Post a Comment
உங்கள் கருத்துக்கள் எதுவாக இருந்தாலும் இங்கே தெரிவிக்கலாம் ... நன்றி .....