சில்க்ஸ்மிதாவாக நடித்த பிறகு கவர்ச்சி வேடத்தில் பட வாய்ப்புகள் – வித்யாபாலன்
சில்க் ஸ்மிதா வேடத்தில் வித்யாபாலன் நடித்த ”த தர்டி பிக்சர்ஸ்” படம் ரிலீசாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் வித்யாபாலன் கவர்ச்சியாக நடித்துள்ளார். இதற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்யும்படி போலீசாருக்கு ஆந்திர கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
இப்படத்தில் நடித்தது குறித்த வித்யாபாலன் கூறியதாவது:
நான் இதுவரை குடும்ப பாங்கான வேடங்களில்தான் நடித்தேன். ஆனால் தர்டி பிக்சர்ஸ் படம் என் இமேஜை மாற்றிவிட்டது. படம் வெளியாகும் முன்னே எனது போஸ்டர்களை பார்த்து ஆபாசமாக நடித்து இருப்பதாக பலரும் பேசினர். ஆனால் படம் வெளியான பிறகு கதையோடு ஒன்றி கவர்ச்சி இருந்தால் ஏற்றுக்கொண்டனர்.
கவர்ச்சியை ரசிர்கள் அருவெறுப்பாக பார்க்கவில்லை. கேரக்டர் தன்மையோடு அதை பார்த்தனர். ஆபாசம் படத்தில் அவசியம் என்பதால் அப்படி நடித்தேன். இப்படத்துக்கு பின் அது போன்ற கவர்ச்சி வேடங்களில் நடிக்க நிறைய பட வாய்ப்புகள் வருகின்றன. நான் மறுத்துவிட்டேன். இனி அதே போன்ற வேடத்தில் நடிக்கமாட்டேன்.
Comments
Post a Comment
உங்கள் கருத்துக்கள் எதுவாக இருந்தாலும் இங்கே தெரிவிக்கலாம் ... நன்றி .....