'மக்களுக்காக போராடிய ஒரு பைத்தியக்காரன் இறந்துவிட்டான் என்பார்கள் மக்கள்' : ஹசாரே கவலை


ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் தான் இறந்தால், மக்களுக்காக போராடிய ஒரு பைத்தியக்காரன்
இறந்து போனான் என்று தான் மக்கள் சொல்வார்கள்' என காந்திய வாதி அன்னா ஹசாரே கவலை வெளியிட்டுள்ளார்.


ஹசாரா பரிந்துரைத்துள்ள லோக்பால் மசோதாவை, பாராளுமன்ற குளிர்கால கூட்டத்டொடரில் நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்த மத்திய அரசு இன்னமும் இழுத்தடித்து வருகிறது.

'தான் கூறிய பல விடயங்கள் மத்திய அரசு தற்போது பரிந்துரைத்துள்ள புதிய மசோதாவில் இடம்பெறவில்லை. லோக்பால் வரையறைக்குள் கடைநிலை ஊழியர்களை கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தியிருந்தோம். முதலில் இக்கோரிக்கயை சேர்த்துக்கொள்ள மத்திய அரசு சம்மதித்திருந்த போதும், ராகுல் காந்தி ஏதோ கூறியுள்ளதால் திடீரென 'U turn' அடித்துள்ளது என ஹசாரே தெரிவித்துள்ளார்.

 லோக்பால் மசோதா விஷயத்தில் மத்திய அரசு நேர்மையாக நடந்துகொள்ளவில்லை. வழங்கப்பட்ட உறுதிமொழிகளுக்கு மதிப்பளிக்கப்படவில்லை. இது நாட்டு மக்களுக்கு பிரதமர் மன்மோகன் சிங் செய்யும் மிக பெரிய துரோகமாகும்.

இப்போது சில்லரை வர்த்தகத்தின் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி கொடுத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதன் மூலம் லோக்பால் மசோதாவை கிடப்பில் போடும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

சி.பி.ஐ தற்போது அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதனால் சுதந்திரமாக செயற்பட முடியாது உள்ளது. இதே போன்று லோக்பால் அமைப்பு ஆகிவிட கூடாது என்பதற்காக தான் சுயாட்சி அமைப்பாக இருக்க வேண்டும் என கோரியுள்ளோம். தேர்தல் நடக்கும் ஐந்து மாநிலங்களில் சூறாவளி பயணம் மேற்கொள்ள போகிறேன். சுத்தமான வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு மக்களை கேட்கப்போகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

தொழில்முறை வலைப்பதிவு எப்படி

கூகுள் அட்சென்ஸ் கிடைக்கவில்லையா

இணையத்தில் பணம் சம்பாதிக்க - 1