நடிகர் வடிவேலு அதிமுகவில் சேர்வதற்கு திட்டமா?
கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம் செய்த பிரபல
நகைச்சுவை நடிகர் வடிவேலு, தற்போது அதிமுகவில் சேர திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் இத்தகவல்களுக்கு வடிவேலு தரப்பு உறுதிப்படுத்தவோ மறுப்பேதும் தெரிவிக்கவோ இல்லை.
கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் பிரச்சாரம் செய்வதற்கு வடிவேலு களமிறக்கப்பட்ட போதும்

அவர் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவையோ அல்லது, மதிமுக பொதுச்செயலாளர் வைகோவையோ தாக்கி பேசியிருக்கவில்லை. தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை கடுமையாக தாக்கி பேசியிருந்தார்.
இந்நிலையில், வடிவேலு அதிமுகவில் சேர முடிவு செய்துள்ளதாகவும், அவருடன் காங்கிரஸ் ஆதரவாளர் இப்ராஹிம் ராவுத்தரும் அதிமுகவில் சேரவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜயகாந்தின் நெருங்கிய வட்டத்துக்குள் இருந்த இப்ராஹிம் ராவுத்தர் விஜயகாந்த்தின் பல திரைப்படங்களை தயாரித்தவர். எனினும் பின்னர் இருவரும் கருத்து வேறுபாட்டினால் பிரிவடைந்தனர்.
இந்நிலையில் வடிவேலுவும், இப்ராகிம் ராவுத்தரும் நேரில் சந்தித்து அதிமுகவில் சேருவதற்கு ஆலோசித்ததாகவும், விரைவில் இது தொடர்பில் முடிவெடுப்பார்கள் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Comments
Post a Comment
உங்கள் கருத்துக்கள் எதுவாக இருந்தாலும் இங்கே தெரிவிக்கலாம் ... நன்றி .....