நடிகையின் ஒழுக்கம் பற்றி நான் பேசலியே! - நடிகர் ஜெய்


ஒரு நடிகையை நிச்சயம் திருமணம் செய்ய மாட்டேன் என்று நடிகர் ஜெய் அறிவித்தது அவருக்கு எதிராக திரும்பியிருக்கிறது. இதையடுத்து அவர் அளித்துள்ள விளக்கத்தில், நான் நடிகையின் ஒழுக்கம் பற்றி பேசவில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார். அஞ்சலிக்கும் ஜெய்க்கும் காதல் என்ற செய்தி பரவியதால், இனி ஜெய்யுடன் நடிக்க மாட்டேன் என அஞ்சலியும், அஞ்சலியை நான் காதலிக்கவும் இல்லை, கல்யாணம் பண்ணவும் மாட்டேன் என்று ஜெய்யும் மாறி மாறி அறிக்கை விட்டனர். 

அதிலும் ஜெய் ஒரு படி மேலே போய், வாழ்க்கையில் ஒரு நடிகையை திருமணம் செய்வதாக இல்லை என்று கூறிவிட்டார். இது சக நடிகைகளுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. நடிகைகளை திருமணம் செய்ய மாட்டேன் என்றால் என்ன அர்த்தம், நடிகைகள் பற்றி அவதூறாக பேசுவதா? என்றெல்லாம் எதிர்ப்பு கிளம்பியது.

இதையடுத்து மீண்டும் ஒரு விளக்க அறிக்கையை வெளியிட்டிருக்கிறார் நடிகர் ஜெய். அதில், நான் நடிகன் என்பதால் உள்ளூர் -வெளியூர் என்று படப்பிடிப்பில் இருப்பேன். என் மனைவியும் பிசியான நடிகையாக இருந்தால் சந்தோஷமாக இருக்குமா? என்ற அர்த்தத்தில்தான் நடிகையை திருமணம் செய்ய கொள்ள மாட்டேன் என்றேன். மற்றபடி நடத்தை பற்றியோ, ஒழுக்கம் பற்றியோ நான் எதுவும் பேசவில்லை, என்று கூறியிருக்கிறார்.

Comments

Popular posts from this blog

பிளாக்கரில் திருக்குறள் வெட்ஜெட் இணைக்க

பிளாக்கரில் youtube வெட்ஜெட் இணைக்க