சென்னையில் விதிமுறைகளை மீறி பல கட்டிடங்கள் கட்டப்பட்டு இருப்பதாகவும், அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கன்ஸ்யூமர் சிவிக் ஆக்ஷன் அமைப்பின் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த வழக்கின் தொடர்ச்சியாக சென்னையில் பல கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டன. தியாகராயநகர் உட்பட சில இடங்களில் உள்ள 28 கடைகள், கட்டிடங்கள், விதிமுறை மீறி கட்டப்பட்டதாகக் கூறி, அவற்றுக்கு மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சி.எம்.டி.ஏ.) `சீல்' வைத்துவிட்டன. இந்த நடவடிக்கையை எதிர்த்து, ரங்கநாதன் தெரு வியாபாரிகள் சங்கம், உஸ்மான்சாலை வியாபாரிகள் சங்கம் மற்றும் சில தனி கடைகள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
thank you welcome.......
ReplyDelete