எய்ட்ஸ் விழிப்புணர்வு

இவைகளால் எய்ட்ஸ் பரவும்



  • எய்ட்ஸ் கிருமி கொண்டோருடன் ஆணுறை இல்லாமல் உடலுறவு கொள்வதன் மூலம்.
  • எய்ட்ஸ் பரிசோதனை செய்யாத இரத்தத்தை செலுத்துவதன் மூலம்
  • கொதிக்கிற நீரில் சுத்தகரிக்கப்படாத ஊசி, கத்தி, பிளேடு மற்றும் பிறவற்றைக் கொண்டு சவரம் செய்தல், மொட்டை அடித்தல், காது குத்தல் மற்றும் பச்சைக் குத்திக் கொள்வதன் மூலம்
  • எய்ட்ஸ் கொண்ட கர்ப்பிணிப் பெண்ணிடம் இருந்து அவளுக்கு பிறக்கும் குழந்தைக்கும் வரலாம், அவளால் கொடுக்கும் தாய்ப்பால் மூலம் சேய்க்கும் பரவலாம்.
இவைகளால் எய்ட்ஸ் பரவாது

எய்ட்ஸ் கிருமி உள்ளவருடன்
  • வீட்டில் ஒன்றாகப் பழகுவதன் மூலம்
  • வேலை செய்யும் இடத்தில் ஒன்றாகப் பழகுவதன் மூலம்
  • தட்டு, தம்ளர், ஸ்பூன் அகியவற்றை சேர்த்து உபயோகிப்பதால்
  • உணவு, தண்ணீர் பகிர்ந்து கொள்வதால்
  • அவர்கள் உபயோகிக்கும் கழிவறை, அல்லது குளியல் தெட்டியை பயன்படுத்துவதன் மூலம்
  • முத்தம் இட்டுக் கொண்டால், இரும்பல் மற்றும் தும்பல் தெறித்தது விட்டால்
  • நோய்யினால் பாதிக்கப்பட்டவருடன் சேர்ந்து விளையாடுவதன் மூலம், கை குலுக்குவதன் மூலம்
  • நோயாளியைக் கடித்த கொசு, மூட்டைப் பூச்சி உங்களை கடித்துவிட்டால்
  • கண்ணீர், உமிழ் நீர் அல்லது வியர்வை உங்கள் மேல் படுவதால்
  • எய்ட்ஸ் கிருமி உள்ளவரின் சிறுநீர், மலத்தை மிதித்து விட்டால்

Comments

Popular posts from this blog

பிளாக்கரில் திருக்குறள் வெட்ஜெட் இணைக்க

பிளாக்கரில் youtube வெட்ஜெட் இணைக்க