அசினுக்கு முத்தம் கொடுத்து தொல்லை கொடுக்கும் நடிகர்!


அசினின் தீவிர ரசிகராகிபோன பாலிவுட் நடிகர் கமால் ஆர் கான், அசினுக்கு தினமும் வெப்சைட் மூலம் முத்தம் கொடுத்து ‌தொல்லை கொடுக்கிறாராம். தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருந்த நடிகை அசின், கஜினி படம் மூலம் இந்திக்கு சென்றார். அசினுக்கு கஜினி படத்திற்கு பிறகு வேறு எந்த படமும் சரியாக போகவில்லை என்றாலும் அம்மணிக்கு, அங்குள்ள ரசிகர்கள் மற்றும் இளம் நடிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பு.


இந்நிலையில், பாலிவுட் நடிகரும், இயக்குநருமான கமால் ஆர் கான் என்பவர் தினமும் அசினுக்கு வெப்சைட் மூலம் முத்தம் கொடுத்து தொ‌ல்லை கொடுக்கிறாராம். அவர் தன்னுடைய மைக்ரோ ப்ளாக்கில், காலையில் எழுந்து அசினுக்கு குட்மார்னிங் சொல்ல தொடங்குவது மட்டுமின்றி, அவரைப்பற்றி புகழ்ந்து தள்ளுகிறாராம். நீங்க ரொம்ப அழகாக இருக்கீங்க, செக்ஸியாக இருக்கீங்க, உங்க நடிப்பு நல்லா இருக்கு என்று சொல்வதுடன், உங்களுக்கு எனது முத்தங்களும் என்று குறிப்பிட்டுள்ளாராம். 


அசினுக்கு தனியாக மைக்ரோ பிளாக் வெப்சைட் எதுவும் கிடையாது. ஆனால், அசினின் நெருங்கிய தோழிகள், இதுபற்றி அசினிடம் தெரிவித்துள்ளனர். இதைக்கேட்டதும் அசின் அதிர்ச்சியடைந்தாராம். மேலும் இந்தபிரச்சனைக்கு என்ன தீர்வு என்று தெரியாமல் முழித்து கொண்டு இருக்கிறாராம்.

Comments

Popular posts from this blog

பிளாக்கரில் திருக்குறள் வெட்ஜெட் இணைக்க

பிளாக்கரில் youtube வெட்ஜெட் இணைக்க