நான் நடிப்பதை நிறுத்தவில்லை – நமீதா
சினிமாவிலிருந்து விலகிவிட்டதாகவும் கட்டுமானத் தொழிலில் முழு கவனம் செலுத்துவதாகவும் வந்த செய்திகளை மறுத்துள்ளார் நடிகை நமீதா. நடிகை நமீதா குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்தவர். 2002-ல் சினிமாவில் அறிமுகமானார். விஜயகாந்த் ஜோடியாக நடித்த முதல் தமிழ் படம் எங்கள் அண்ணா சூப்பர் ஹிட்டானது.
தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளிலும் நடித்தார். நமீதா நடிப்பில் கடைசியாக கடந்த வருடம் ‘இளைஞன்’ படம் ரிலீசானது. அதன் பிறகு படங்கள் இல்லை. தற்போது மும்பையில் கட்டுமான நிறுவனம் தொடங்கி அபார்ட்மெண்ட் வீடுகள் கட்டி கொடுத்து வருகிறார்.
கட்டுமான நிறுவன தொழில் அதிபர் ஆனதால் சினிமாவுக்கு முழுக்குப் போட்டு விட்டதாக செய்தி பரவியது. இதுபற்றி கேட்டபோது, நமீதா மறுத்தார். அவர் கூறுகையில், “சினிமாவை விட்டு நான் விலக வில்லை. மும்பையில் கட்டுமான நிறுவனம் தொடங்கி இருப்பது உண்மைதான். அதற்கு நான் உரிமையாளர் மற்றபடி தொழிலை கவனித்துக் கொள்ள நிறைய பேரை நியமித்துள்ளேன்.
நான் சில நாட்கள் மும்பையில் தங்கி தீவிர உடற்பயிற்சி மூலம் எனது உடம்பை குறைத்தேன். இப்போது நிரந்தரமாக சென்னைக்கு குடி வந்துவிட்டேன்.
மங்கை அரிராஜன் இயக்கும் படமொன்றில் நடிக்கிறேன். என்.கே. விஸ்நாதனனின் ‘ஓடி விளையாடு பாப்பா’ என்ற ‘ரீமேக்’ படத்திலும் நடிக்கிறேன்.
இது தவிர தெலுங்கு படமொன்றுக்கும் ஒப்பந்தமாகியுள்ளேன். அப்படத்தில் முழுக்க சேலை கட்டி நடிக்கிறேன். நல்ல கதைகளுக்காக காத்து இருக்கிறேன். அப்படி கதைகள் அமைந்தால் தொடர்ந்து நடிப்பேன்,” என்றார்.
Comments
Post a Comment
உங்கள் கருத்துக்கள் எதுவாக இருந்தாலும் இங்கே தெரிவிக்கலாம் ... நன்றி .....