ரஜினியின் புதிய முடிவு!

"ராணா'வில் ஆக்ஷன் காட்சிகள் நிறைய இருப்பதால், இப்போதைக்கு ரொம்பவும் வருத்திக் கொண்டு நடிக்க வேண்டாம் என்று ரஜினியின் நலவிரும்பிகள் சொல்லி வருகிறார்கள். இதைக் கேட்டு சிந்தனையில் ஆழ்ந்த ரஜினி, தன் உடல் நலத்துக்காக ரசிகர்களை ஏமாற்றக் கூடாது, அதே நேரத்தில் தனது நலம் விரும்பிகள் சொல்வதையும் புறம் தள்ளி விடக்கூடாது என்று புதிய முடிவொன்றை எடுத்திருக்கிறாராம். உடனடியாக, நகைச்சுவை கலந்த குடும்பப் படம் ஒன்றில் நடிக்க வேண்டும் என்று கதை விவாதம் நடத்திக் கொண்டிருப்பதாகக் கேள்வி. இந்தப் படத்திற்குப் பிறகே "ராணா'வாம்.
Comments
Post a Comment
உங்கள் கருத்துக்கள் எதுவாக இருந்தாலும் இங்கே தெரிவிக்கலாம் ... நன்றி .....