அசான்சை நாடு கடத்த உத்தரவு


விக்கிலீக்ஸ் இணைய தளத்தின் நிறுவனர் ஜூலியன் அசான்சை ஸ்வீடனுக்கு நாடு கடத்தலாம் என்று பிரிட்டிஷ் உயர்நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.

அசான்ச்சுக்கு எதிராக பாலியல் ரீதியான தாக்குதல் மற்றும் பாலியல் வல்லுறவு ஆகிய குற்றச்சாட்டுக்கள் ஸ்விடனில் பதிவாகியுள்ளன.
இந்தத் தீர்ப்பின் காரணமாக அடுத்த 10 நாட்களுக்குள் அசான்ச் பிரிட்டனில் இருந்து நாடு கடத்தப்படும் சூழல் உருவாகியுள்ளது. இருந்தும் இந்த தீர்ப்புக்கு எதிராக அவர் உச்சநீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்வார் என்று நிருபர்கள் கூறுகின்றனர்.
தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து மறுத்து வரும் அசான்ச், அவை அரசியல் உள்நோக்கம் காரணமாக சுமத்தப்படுவதாகக் கூறி வருகிறார்.
அமெரிக்காவின் ராஜாங்க தந்திகளை விக்கிலீக்ஸ் இணைய தளம் மூலம் வெளிப்படுத்திய அசான்ச் அமெரிக்காவின் கோபத்துக்கு ஆளாகியிருந்தார்.

Comments

Popular posts from this blog

பிளாக்கரில் திருக்குறள் வெட்ஜெட் இணைக்க

பிளாக்கரில் youtube வெட்ஜெட் இணைக்க