பெருமை கொள்ளும் நயன்தாரா
வந்தவேகத்தில் தமிழ் ரசிகர்களின் இதயத்தில் இடம்பிடித்தவர் நயன்தாரா. எத்தனை வேகமாக அவரைப் புகழ் சூழ்ந்துகொண்டதோ
அத்தனை வேகமாக அவரை சர்ச்சையும் சூழ்ந்து கொண்டது.
அவரது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி எவ்வளவோ எழுதித் தீர்த்து விட்டது மீடியா. ஆனால் அவரது திரை வாழ்கையில் தாம் ஏற்று நடித்திருக்கும் சீதாதேவி காதாபாத்திரத்துகாக பெருமைப்படப் பேசியிருக்கின்றார் நயன்தாரா.
“ நான் கிறிஸ்தவப் பெண்ணாக இருந்தாலும் நமது கலாச்சாரத்தின் அடையாளமாக இருக்கும் சீதாதேவியின் கதாபாத்திரத்தில் நடித்ததை பெருமையாக நினைக்கிறேன். மீண்டும் எனக்கு இப்படியொரு வாய்ப்பு நிச்சயமாக அமையாது.” என்று உணர்ச்சிகரமாகச் சொல்லியிருகிறார்.
தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளில் 45 கோடி செலவில் உருவாகியிருக்கும் ‘ஸ்ரீராமராஜ்யம்’ படம்தான் நயன்தாரா நடித்து முடித்திருக்கும் அவரது கடைசி படம். இந்தப்படத்தில் என்.டி.ராமராவ் எங்கே திரும்பி வந்து விட்டாரோ என என்ணும் விதமாக ராமபிராணாக பாலகிருஷ்ணா நடித்திருகிறார்.
ஆந்திராவில் படம் வெளியாகி விட்டது. தமிழில் விரைவில்! நல்லவேளையாக நயந்தாராவின் சொந்தவாழ்க்கையை மனதில் வைத்து இந்தப் படத்தை அங்கே யாரும் எதிர்க்கவில்லை. இங்கேயும் எதிர்ப்பு இருக்காது என்று நம்பலாம்!

Comments
Post a Comment
உங்கள் கருத்துக்கள் எதுவாக இருந்தாலும் இங்கே தெரிவிக்கலாம் ... நன்றி .....