அணு விஞ்ஞானி அப்துல் கலாம்

அணு விஞ்ஞானி அப்துல் கலாம் ஒரு தமிழர் .அவர் ஒரு சிறந்த விஞ்ஞானி .அதில் தேர்ச்சி பெற்றவர் என்பதில் சந்தேகம் இல்லை .ஆனால் அவர் மக்கள் நலன் விரும்பி என்றோ ,மக்களுக்கு தீங்கு 

விளைவிக்கும் செயலை செய்யமாட்டார் என்றோ நாம் நினைக்க முடியாது .அவர் ஒரு தமிழர் என்பதால் தமிழனுக்கு எந்த தீங்கையும் ஏற்ப்படுத்தும் மத்திய அரசின் நடவடிக்கையை ஆதரிக்க மாட்டார் என்று நம்ப நாம் இன்னொரு கிரகத்தில் குடி இருக்க வில்லை ,நம் கண்முன்னால் நம் மீனவர் ஒவ்வரு நாளும் செத்து பிழைக்கிறார்கள் .ஏன் இந்த நிலை என் தமிழ் மக்களுக்கு என்று ஒரு நாள் கூட வாய் திறந்தது இல்லை .பல லட்சம் தமிழர் நாடற்ற அனாதைகளாக பல நாடுகளில் அவதிப்படும் போதும் அதை பற்றி ஒரு நாளும் வாய் திறந்ததில்லை .ஒரு லட்சம் மக்கள் ஈழத்தில் செத்த போதும் அதற்க்கு ஒரு வருத்தமும் தெரிவிக்கவில்லை .இவை எல்லாம் எதை காட்டுகிறது .அவர் ஒரு இந்தியனாக உள்ளார் .இந்திய அரசின் அதிகார வர்க்கத்தில் அவரும் ஒரு மனிதர் .அவர் ஒரு பண்பாளரா இருக்கலாம் .ஆனால் இறக்க சிந்தனை உள்ளவரா என்றால் புரியாத புதிராக தான் உள்ளார் .ஆகவே அவரின் தேசப்பற்றுக்கு மதிப்பளிப்போம் .ஆனால் தமிழர்களின் உரிமையில் அவர் அக்கறை கொண்டுள்ளார் என்பதை ஏற்க்க முடியாது .அவர் கூடங்குள அணு உலை பாதுகாப்பானது என்று அறிக்கை கொடுத்து விட்டால் தமிழர்கள் அதை ஏற்க்கனும் என்று அர்த்தமோ ,அல்லது கட்டாயமோ இல்லை .காரணம் எந்த ஒரு மனிதனும் ஒரு மக்கள் துன்பத்தை கண்டு அவனுக்காக குரல் கொடுப்பவனே மக்கள் நம்பிக்கைக்கு உரியவனாகிறான் .ஆகையால் மக்கள் பிரச்சினையில் கலாம் ஐயா சொல்லிவிட்டார் என்று ஒதிங்கி கொள்ள முடியாது .கூடங்குளம் அணு உலை தமிழனின் வாழ்வுரிமை பிரச்சினை .இது காலம் கடந்த போராட்டம் என்று சிலர் சொல்லுகிறார்கள் .மனிதன் எப்போது அதன் ஆபத்தை உணர ஆரம்பிக்கிரானோ அப்போதுதான் அதற்க்கு எதிராக செயல் பட அவனை தூண்டுகிறது .ஆகையால் ஆபத்து என்று தெரிந்தவுடன் அது எந்த நிலையில் இருந்தாலும் அதை எதிர்த்து போராடலாம் .அதற்க்கு கால வரைமுறை கிடையாது .மனிதனுக்கு உயிர் இருந்தால் தான் சுகபோகமாக வாழலாம் .அந்த உயிர்க்கே ஆபத்து என்ற போது சுகங்கள் ஒரு பொருட்டு கிடையாது .அதை மாற்று வழிகளில் தேடிக்கொள்ளலாம் .ஆனால் உயிர் போனபின் சுகத்தை தேடமுடியாது .ஆகவே மோசமான விபத்தை உண்டுபண்ணும் அணு உலையை ஏற்க்க முடியாது .அப்துல் கலாம் சொல்லிவிட்டால் ஆபத்து இல்லை என்பதற்கு அவர் என்ன இந்த உலகை படைத்த கடவுளா .அவர் சொல்லிவிட்டார் இனி இயற்கை அழிவோ அல்லது யுத்தமோ வராது என்பதற்கு .வேண்டாம் அணு உலை .ஒரே சொல்லாக தமிழக மக்களே சொல்லுங்கள் அணு உலை வேண்டாம் .டாடா வெஸ்ட் பங்கால் ல நானா கார் கம்பனியை பிரித்தெடுத்து குஜராத்தில் நிருபியது போல் ,அணு உளையவும் எங்காவது கொண்டு போய் நிறுவட்டும் .தமிழனுக்கு அறிவு உள்ளது .அவன் மின்சாரத்தை வேறு வழியில் தேடிக்கொல்வான் நிச்சயம் .நம்பிக்கை உள்ளது .மத்திய ஆட்சியாளர்களின் நயவஞ்சக வலையில் சிக்க வேண்டாம் தமிழர்கள் .விழித்தெழு தமிழா .உனக்கு நீயே ஆபத்தை உண்டாக்கி கொள்ள வேண்டாம் . 

Comments

Popular posts from this blog

பிளாக்கரில் திருக்குறள் வெட்ஜெட் இணைக்க

பிளாக்கரில் youtube வெட்ஜெட் இணைக்க