அசின் ராஜபக்சேவின் மருமகளாகிறார்

இந்தியத் திரைப்பட விழா கொழும்பில் நடந்தபோது, அதை பாலிவுட் திரை நட்சத்திரம் அமிதாப்பச்சன் மற்றும் தமிழ் திரைப்பட உலகத்தினர் அதை புறக்கணித்தனர். சல்மான்கான், உள்ளிட்ட சிலரும் விழா மேடையில் தோன்றி சிங்கள மக்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடித்தனர்.
இலங்கையில் தமிழ் இனத்தின் மீது சிங்கள அரசு நடத்திய ஈவிரக்கமற்ற போர், மனித அறத்திற்கு எதிரான மாபெரும் குற்றமாக விவாதிக்கப்படுகிறது. இன்றைய சூழலில் மேலும் இந்தியா வரம்பு மீறி உதவிகளை இலங்கைக்கு செய்கிறது.
உலகம் முழுவதும் எழுகின்ற குற்றச்சாட்டுகளால் இலங்கை காயப்பட்டுக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் நடந்த மேற்கு உலக நாடுகளின் போக்குகள் இலங்கை அரசுக்கு சிறிது அச்சத்தை கொடுக்கத்தான் செய்திருக்கின்றன. போர்க்காலத்தின் போது இலங்கையில் நடந்ததைப் பற்றி அறிய நிபுணர் குழு ஒன்றை அமைத்தார் ஐ.நா. தலைவர் பான் கீ மூன். இங்கிலாந்தும் ஈழத் தமிழர்களின் போராட்டத்தை
மறைமுகமாக அங்கீகரித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் பதிவு செய்யவும் அனுமதித்து இருக்கிறது. இலங்கையில் தனது வரிச்சலுகைகளை நீட்டிப்பதா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறது ஐரோப்பா ஒன்றியம். இந்த வரிச்சலுகை இழப்பால் 10 இலட்சம் சிங்களவர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும், தொழில் மற்றும் வருமானத்தை இழப்பார்கள். இது இலங்கையின் பொருளாதாரத்திற்கு பெரும் பின்னடைவாகும்.
மறைமுகமாக அங்கீகரித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் பதிவு செய்யவும் அனுமதித்து இருக்கிறது. இலங்கையில் தனது வரிச்சலுகைகளை நீட்டிப்பதா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறது ஐரோப்பா ஒன்றியம். இந்த வரிச்சலுகை இழப்பால் 10 இலட்சம் சிங்களவர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும், தொழில் மற்றும் வருமானத்தை இழப்பார்கள். இது இலங்கையின் பொருளாதாரத்திற்கு பெரும் பின்னடைவாகும்.
இந்த நிலையில் இலங்கையில் நடந்த படப்பிடிப்புக்கு சென்ற தென்னிந்திய திரைப்பட நடிகை அசின், இலங்கை அதிபர் ராஜபக்சே குடும்பத்துடன் ஒட்டிக் கொண்டார். இதனால் தமிழகத்தில் நடிகர்கள் மற்றும் பொதுமக்களின் பலத்த எதிர்ப்புக்குள்ளான தென்னிந்திய நடிகை அசின், இலங்கை அதிபர் ராஜபக்சே மனைவி டுராந்தியுடன் தினமும் விருந்து சாப்பிட்டார். அவருடன் வவுனியாவிற்குச் சிறப்பு விஜயம் மேற்கொண்டார்.
இலங்கையில் நடைபெறுகின்ற இந்தி திரைப்பட படப்பிடிப்புக்காக அங்கு சென்றுள்ள நடிகை அசினுக்கு, தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு காட்டப்படுகிறது. இதனால் இலங்கையில் சிங்கள ராணுவத்தின் பலத்த பாதுகாப்பு அவருக்கு தரப்பட்டது. இலங்கை அதிபரின் சிறப்பு விருந்தினராக நடிகை அசின் கவனிக்கப்படுகிறார். இந்நிலையில், வவுனியா நகருக்கு, மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி டுராந்தியுடன் சென்ற நடிகை அசின் வவுனியா பொது மருத்துவமனையை பார்வையிட்டார். அப்போது அங்கிருந்த நோயாளிகள் சிலர், நடிகை அசின் தந்த நிவாரணப் பொருட்களையும், பணத்தையும் வாங்க மறுத்துவிட்டனர். தமிழ் நாட்டையும், தமிழ் திரையுலகத்தினரையும், தமிழ் ரசிகர்களையும் தூக்கி எறிந்து துச்சமாக மதித்து அசின் இலங்கையில் பேட்டியைக் கொடுத்துள்ளார். இந்தியாவின் நடிப்புத்துறை ஜாம்பவான்கள் அமிதாப்பச்சன், ரஜினி போன்ற நடிகர்களே திரைப்பட விழாவைப் புறக்கணிக்க அசின் இவ்வாறு நடந்து கொள்வது, தமிழ் நாட்டில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும் எனப் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
தன்னை தமிழ் திரையுலகினர் ஒன்றும் செய்து விட முடியாது என்றும், தான் இது குறித்து பெரிதாக அலட்டிக் கொள்ளப்போவது இல்லை என்றும் அசின் தெரிவித்துள்ளார். தான் அரசியல்வாதி இல்லை, ஒரு நடிகை என்று தன்னைக் கூறிக் கொண்டு, இலங்கை சென்ற அசின் தற்போது , மகிந்தவின் மனைவியுடன் பிசினாக ஒட்டி, பல இடங்களுக்குச் சென்று, டுராந்தி ராஜபக்ஷவுக்கு ஆதரவு தேடிக் கொடுத்துக் கொண்டுள்ளார். அசின் இவ்வாறு நடந்து கொள்வது மகிந்த ராஜபக்சே மகன் நாமல் எம்.பி.யை திருமணம் செய்து கொள்ளவே என்று இலங்கை அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். அம்பாந்தோட்டை தொகுதி எம்.பி.யான நாமல் ராஜபக்சேவிடம் பல ஆயிரம் கோடிகள் பணம் இருப்பதை தெரிந்து கொண்ட அசின் அவரை திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்து விட்டார் என்கிறார்கள்.
இலங்கை அரசு பிடித்து வைத்துள்ள கேபியைப் பயன்படுத்தி விடுதலைப்புலிகள் வங்கி கணக்கில் ரூபாய் 100 கோடியை எடுத்த இலங்கை உளவுப்படை அதை ராஜபக்சே உத்தரவுப்படி நாமளிடம் கொடுத்தது. இந்த பணத்தை பயன்படுத்தி தான் எம்.பி. தேர்தலில் ராஜபக்சேவும் அவரது குடும்பத்தினரும் தேர்தலில் வெற்றி பெற்றனர். இதையெல்லாம் தெரிந்து கொண்ட அசின் இப்போது இலங்கையின் மருமகளாகிறார்.
Comments
Post a Comment
உங்கள் கருத்துக்கள் எதுவாக இருந்தாலும் இங்கே தெரிவிக்கலாம் ... நன்றி .....