நான் தனுஷை நம்புகிறேன்! – ஐஸ்வர்யா


சமீபத்தில் கோடம்பாக்கத்தையே கலக்கிய செய்தி என்றால் அது தனுஷ் – ஸ்ருதி ஹாஸன் விவகாரம்தான்.
செய்தி வெளியான அன்றே அதை மறுத்திருந்தார் ஸ்ருதி. ஆனால் தனுஷ் ஒன்றும் பேசவில்லை. மாறாக அன்று மாலை நடந்த 3 படப்பிடிப்பில் மனைவி ஐஸ்வர்யாவுடன் ஜாலியாக போஸ் கொடுத்திருந்தார் அவர்.

ஆனால் ஒரு மனைவியால் இதுபோன்ற செய்திகளை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியுமா… ஐஸ்வர்யா கொஞ்சமும் அலட்டிக் கொள்ளவே இல்லை. சூப்பர் ஸ்டார் மகள் அல்லவா…
தனுஷ் – ஸ்ருதி விவகாரம் குறித்து அவர் சமீபத்தில் கூறுகையில், “நான் இருப்பது சினிமா துறை. இங்கே அனைத்தையும் எதிர்கொண்டாக வேண்டிய சூழல். ஆனால் தனுஷ் – ஸ்ருதி பற்றி வந்தது வெறும் வதந்திதான். அதில் எந்த உண்மையும் இல்லை. தனுஷை நன்கு புரிந்தவள் நான். அவர் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. நாங்கள் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் நம்பிக்கை, எங்கள் குடும்பத்தின் பக்கபலத்துடன் இதுபோன்ற சோதனைகளைக் கடந்துவிடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் நிதானமாக.

Comments

Popular posts from this blog

திருடர்களுடனும், குண்டர்களுடனும் கூட்டணி இல்லை : ராகுல் காந்தி தாக்கு

2012 இன் ஆஸ்கார் பரிந்துரைகள்

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை: விஜயகாந்த்