திருடர்களுடனும், குண்டர்களுடனும் கூட்டணி இல்லை : ராகுல் காந்தி தாக்கு


உத்தர பிரதேச சட்டமன்ற தேர்தலில் தேர்தலுக்கு பிறகு எந்த கட்சியுடனும் கூட்டணி கிடையாது. குறிப்பாக திருடர்கள் மற்றும் சமூகவிரோதிகளுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என
காங்கிரஸ் கட்சியின் பொதுசெயலாளர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேச தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு ஏற்படலாம் எனவும், தொங்கு
சட்டசபை அமையும் பட்சத்தில், முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாத கட்சியுடன் கூட்டணி வைத்தே காங்கிரஸ் அரசு ஆட்சியை பிடிக்க முடியும் எனவும் எதிர்வு கூறப்பட்ட நிலையில், ராகுல் காந்தி இவ்வாறு தெரிவித்துள்ளார். இது சமாஜ்வாத கட்சிக்கான மறைமுக அடியாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

உத்தர பிரதேச மாநிலத்தின் மெத்வால் நகரில், ராகுல் காந்தி தேர்தல் பிரச்சார கூட்டமொன்றில் கலந்து கொண்டு பேசுகையில் இவ்வாறு அவர் கூறினார். மேலும் அவர் தொடர்ந்து பேசுகையில், தேர்தலில் காங்கிரஸ் கட்ச்க்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கும் எனவும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருவரே உத்தர பிரதேச முதலமைச்ச்சர் ஆவார் எனவும் நம்பிக்கை வெளியிட்டார்.

மேலும் 'கடந்த 22 ஆண்டுகாலம் உத்தர பிரதேசத்தில் நடந்த ஆட்சி மிக சோகமான ஒரு நிகழ்வு. இனிமேலும் அது நடைபெறாது. எதிர்க்கட்சிகளின் பொய்யான வாக்குறுதிகளை நம்பாதீர்கள். என் மீதும், எனது பாட்டி (இந்திரா), தந்தை (ராஜீவ்) மீதும் நம்பிக்கை வையுங்கள். எனது இறுதிசொட்டு இரத்தம் உள்ளவரை மக்களுக்காக உழைப்பேன். நீங்கள் இரண்டு அல்லது நான்கு சீட்டுக்கள் தான் எங்களுக்கு கொடுத்தாலும், நாங்கள் ஒரு போதும் திருடர்களுடனும் குண்டர்களுடன் கூட்டணி வைக்க மாட்டோம்' என்றார்.

மொத்தம் 403 சட்டபேரவை ஆசனங்களுக்காக உத்தரபிரதேச தேர்தல் நடைபெறுகிறது. கடந்த வருடம் அஜித் சிங்கின் ராஷ்டிரிய லோக் தால் கட்சியுடன் கூட்டணி வைத்த காங்கிரஸ் அவர்களுக்கு 45 ஆசனங்களை ஒதுக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

2012 இன் ஆஸ்கார் பரிந்துரைகள்

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை: விஜயகாந்த்